படம் வெளியாகி மூன்றாவது நாள்.. தனுஷ் என்ன செய்தார் தெரியுமா?.. ரோபோ சங்கர் ஷேரிங்ஸ்

சென்னை: கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் முதன்முறையாக தோன்றிய இவர் தனுஷ் நடித்த மாரி படத்தில் நடிகராக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார் ரோபோ. டைமிங் கவுண்ட்டர்களும், அவரது பாடி லாங்குவேஜும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. இந்நிலையில் தனுஷ் குறித்து பேசியிருக்கிறார் ரோபோ சங்கர்.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ சங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ சங்கர்.

robo shankar dhanush maari

குவிந்த பட வாய்ப்புகள்: அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் என தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ சங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ சங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர் என்பது நினைவுகூரத்தக்கது.

உடல்நலக்குறைவு: ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோ சங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார். மேலும் ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமானதற்கு குடிதான் காரணம் என்று பலர் பேசினர். அதனை ரோபோ சங்கரும் ஒத்துக்கொண்டார். மேலும் இப்போது மது பழக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வந்திருக்கும் அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

ரோபோ பேட்டி: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு ரோபோ சங்கர் அளித்த பேட்டியில் தனுஷ் குறித்து பேசுகையில், "மாரி படம் எடுத்தபோது சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்கப்போவதாக தனுஷிடம் இயக்குநர் கூறியிருக்கிறார். உடனே ரோபோவா; அவர் குண்டாக இருப்பாரே. அவர் முன் நான் ரொம்ப ஒல்லியாக தெரிவேனே என்று தனுஷ் கூறியிருக்கிறார். அப்போது நான் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்ததால் உடலை கொஞ்சம் ஃபிட்டாக வைத்திருந்தேன்.

பாராட்டிய தனுஷ்: மாரி படத்தின் ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை காமெடிகளை செட்டிலேயே உருவாக்கினேன். டப்பிங்கிலும் தனுஷ் எதுவும் சொல்லவில்லை. இது நன்றாக இருக்கு ரோபோ அப்படியே இருக்கட்டும் என்றுதான் தனுஷ் கூறினார். மாரி படம் வெளியாகி மூன்றாவது நாளில் தனுஷ் எனக்கு பெரிய தங்க செயின் ஒன்றை பரிசளித்தார். அதற்கு பிறகு என்னுடைய திருமண நாளில் தங்கத்தில் விநாயகர் டாலர் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய உதவிகளை எல்லாம் செய்திருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X