எவ்ளோ உயரம் போனாலும் மனசுக்குள்ள விடமாட்டார்... விஜய் குறித்து ஜூனியர் என்டிஆர்!

சென்னை : நடிகர் விஜய் எளிமையான அதே நேரத்தில் அமைதியானவர்.

அவர்குறித்து தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் சக நடிகர்கள் எப்போதும் பெருமையாக பேசுவார்கள்.

அந்த வகையில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் விஜய் குறித்து சிலாகித்து பேசியுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்திற்கு பிறகு தற்போது ரத்தம் ரணம் ரௌத்திரம் படம் உருவாகியுள்ளது. 1920ம் ஆண்டு காலத்தில் நடைபெற்ற சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் கட்டுப்பாடு

திரையரங்குகளில் கட்டுப்பாடு

படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. வரும் ஜனவரி 7ம் தேதி படம் உலக அளவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஓமிக்ரான் உள்ளிட்டவற்றால் திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் மாதத்திற்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரமோஷன் பணிகள்

பிரமோஷன் பணிகள்

ஆயினும் பிரமோஷன் பணிகளில் தொடர்ந்து ஆர்ஆர்ஆர் டீம் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் விழாவில் படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்த பல்வேறு விஷயஙகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இன்றைய தினம் விஜய் டிவிக்கும் பேட்டி அளித்துள்ளனர்.

ஜூனியர் என்டிஆர் பேட்டி

ஜூனியர் என்டிஆர் பேட்டி

இதில் பேசிய படத்தின் இரண்டு நாயகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். படத்தில் தண்ணீருக்குள் ஓடும் காட்சி, பரண்மீது பறந்து தாக்கும் காட்சி மற்றும் காட்டில் வெற்று உடம்புடன் ஓடும் காட்சிகள் அனைத்தும் டூப் இல்லாமல் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

விஜய் குறித்து பாராட்டு

விஜய் குறித்து பாராட்டு

இந்நிலையில் விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் இருக்க முடியுமா? பேட்டியை எடுத்த டிடி விஜய் குறித்த கேள்வியை எழுப்பிய நிலையில், ஜூனியர் என்டிஆர் உற்சாகமாக பதிலளித்தார். விஜய் சூப்பர் மனிதர் என்று ஜூனியர் என்டிஆர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியை மனதிற்குள் விடாதவர்

வெற்றியை மனதிற்குள் விடாதவர்

மேலும் இதயப்பூர்வமாக நேசிப்பர் என்று தெரிவித்துள்ளார். தன்னைவிட சீனியர் என்றும் கைட் என்றும் அண்ணன் என்றும் கூறியுள்ளார். அவருடைய டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அருமை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். எவ்வளவு உயரம் போனாலும் அதை மனதுக்குள் விடாதவர் விஜய் என்றும் ஜூனியர் என்டிஆர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X