Suriya Private Jet: 120 கோடிக்கு பிரைவேட் ஜெட் வாங்கினாரா சூர்யா?.. உண்மை என்ன?

சென்னை: நடிகர் சூர்யா 120 கோடி ரூபாய்க்கு புதிதாக தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வந்த சூர்யா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

நடிகை ஜோதிகா இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நிலையில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஷைத்தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சுமார் 200 கோடி வசூலை அந்த படம் கடந்தது.

Suriya Private Jet Jyothika

அக்ஷய் குமார் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்றும் படத்தின் இந்தி ரீமேக் படமான சர்ஃபிரா இந்த ஆண்டு வெளியான நிலையில், மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்நிலையில், சூரரைப் போற்று படத்தின் நாயகன் சூர்யா பிரைவேட் ஜெட் வாங்கியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அது குறித்த உண்மையை சூர்யா தரப்பு கூறியுள்ளது.

120 கோடியப்பு: நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில் கங்குவார் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவில் ஆயுதபூஜைக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா 120 கோடிக்கு பிரைவேட் ஜெட் வாங்கி இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

மருத்துவமனைகள் கட்டி இருக்கலாமே: கோயில் கட்டும் செலவில் மருத்துவமனை கட்டி இருக்கலாமே என தஞ்சாவூரில் நடிகை ஜோதிகா பேசியதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் சூர்யாவின் ஹேட்டர்கள் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பிரைவேட் ஜெட் தொடர்பான உண்மை தன்மை வெளியாகி இருக்கிறது.

எல்லாமே வதந்தி: நடிகர் சூர்யா பிரைவேட் ஜெட் வாங்கவில்லை என்றும் அது முற்றிலும் வதந்தி என சூர்யா தரப்பு செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது.Dassault Falcon 2000 ரக பிரைவேட் ஜெட்டை சூர்யா வாங்கியதாக வரும் தகவலில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை என விளக்கியுள்ளனர்.

பிரைவேட் ஜெட் வாங்கிய பிரபலங்கள்: இந்திய சினிமா பிரபலங்களில் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், நாகார்ஜுனா, ராம்சரண், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஹ்ரித்திக் ரோஷன், சல்மான்கான், மகேஷ் பாபு, நயன்தாரா மற்றும் சன்னி லியோன் உள்ளிட்ட பிரபலங்கள் பிரைவேட் ஜெட்டை சொந்தமாக வைத்திருப்பதாக தகவல்கள் உள்ளன. சூர்யா சொந்தமாக பிரைவேட் ஜெட் வாங்கினாலும், அதில் எந்தவொரு தவறும் இல்லை. அது அவர் சொந்தமாக உழைத்த பணத்தில் வாங்கும் ஒரு சொத்து தான் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X