For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாவ்....தல அஜித்திற்கு இப்படி ஒரு பாராட்டா...கிஃப்ட் கொடுத்து அசத்திய ரஷ்ய டிரைவர்

  |

  சென்னை : அஜித் கடைசியாக நடித்த படம், 2019 ல் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் தான். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து, சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. இதில் அமிதாப் கேரக்டரில் அஜித் நடித்திருந்தார். வித்யா பாலன், ஷ்ரத்தா கபூர், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  8 ஆண்டுகளுக்குப்பின் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை!8 ஆண்டுகளுக்குப்பின் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை!

  அதை முடித்த கையோடு அதே கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2020 ம் ஆண்டே இந்த படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி போகிறது.

  ஆக்ஷன் த்ரில்லர் படம்

  ஆக்ஷன் த்ரில்லர் படம்

  ஆக்ஷன்- த்ரில்லர் படமாக உருவாகி உள்ள வலிமை படத்தில் அஜித், போலீஸ் ஆபீசர் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சட்ட விரோத பைக் ரேஸ்களை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். இந்த படமும் போனி கபூரின் Bayview Projects LLP பேனரில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

  மிரட்டிய ஃபஸ்ட்லுக்

  மிரட்டிய ஃபஸ்ட்லுக்

  ரசிகர்களின் நீண்ட காத்திருப்பு மற்றும் ஓயாத அப்டேட் கேள்விகளுக்கு வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. வேற லெவல் ஆக்ஷன், அதிரடிகளுடன், மிரட்டல் இசையுடனும் வெளியிடப்பட்ட இந்த மோஷன் போஸ்டர் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்து விட்டது.

  நாங்க வேற மாரி

  நாங்க வேற மாரி

  அதைத் தொடர்ந்து வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேற மாரி பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் புதிய சாதனையே படைத்து விட்டது. அந்த அளவிற்கு அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடினர். இரண்டாவது சிங்கிள் எப்போது வரும் என கேட்டு அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  ரஷ்யா ஷுட்டிங் முடிந்தது

  ரஷ்யா ஷுட்டிங் முடிந்தது

  ஆனால் படத்தின் ஷுட்டிங்கை முடித்த பிறகே அடுத்த அப்டேட் என்பது போல் படக்குழு, இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக ரஷ்யா சென்றது. அங்கு மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி உள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும், தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  பைக் டிரிப் புறப்பட்ட அஜித்

  பைக் டிரிப் புறப்பட்ட அஜித்

  ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழு மட்டும் தான் இந்தியா திரும்பி உள்ளது. ஆனால் தல அஜித், ரஷ்யாவில் 5000 கி.மீ., தூரத்திற்கு பைக் டிரிப் புறப்பட்டு சென்று விட்டாராம். இந்த டிரிப்பில் ரஷ்யாவின் பெரும்பாலான நகரங்கள் உள்ளடங்குமாம். இந்த பயணத்தை முடித்து விட்டு தான் அவர் இந்தியா திரும்புவாராம்.

  கிஃப்ட் கொடுத்த ரஷ்ய டிரைவர்

  கிஃப்ட் கொடுத்த ரஷ்ய டிரைவர்

  இதில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ரஷ்யாவை சேர்ந்த டிரைவர் அலெக்ஸ், அஜித்தின் தீவிர ரசிகராகி விட்டாராம். அவர் தனது நினைவாக அஜித்திற்கு கிஃப்ட் கொடுத்துள்ளாராம். வலிமை படக்குழு ரஷ்யாவில் தங்கி இருந்த நாட்களில் அலெக்ஸ், படக்குழுவினரை ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு தினமும் அழைத்து செல்வாராம்.

   உங்கள போல யாரையும் பாக்கல

  உங்கள போல யாரையும் பாக்கல

  அப்போது அஜித்தை மிகவும் பிடித்து விட்டதால் அஜித்தின் பெயர் பிரிண்ட் செய்யப்பட்ட டி ஷர்ட், சாக்லேட் உள்ளிட்டவைகள் அடங்கிய கிஃப்ட் பாக்சை தான் அவர் பரிசாக கொடுத்துள்ளாராம். கிஃப்ட்டை கொடுத்து விட்டு, ரஷ்யாவின் Kolomna சிட்டியில் உள்ள அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். காரணம், நாங்கள் பார்த்ததிலேயே நீங்கள் தான் மிக கனிவான மனிதர் என கூறி உள்ளார்.

  சந்தோஷத்தில் தல ரசிகர்கள்

  சந்தோஷத்தில் தல ரசிகர்கள்

  இந்த தகவல் ட்விட்டரில் பரவியதுமே அஜித் ரசிகர்கள் அளவில்லாத சந்தோஷத்தில் இதை கொண்டாடி, வைரலாக்கி வருகின்றனர். வலிமை பட ரிலீசை மிஞ்சும் அளவிற்கு இந்த தகவல் சந்தோஷம் தருவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

  English summary
  Now Ajith is in 500 km bike trip in Russia. After Valimai wrap up, local driver Alex has given a gift box containing a t-shirt printed with Ajith's name and chocolates. Giving away the gift, he said everyone in Kolomna City, Russia loves you. The reason is that you are the most kind man we have ever seen.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X