விஜய் இப்போதும் அப்படித்தான்.. அதை வைத்துதான் புரிகிறது.. மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பையே விமர்சன ரீதியாக பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டதாக தெரிகிறது. தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தோடு சினிமாவிலிருந்து விலகும் அவர் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை கொண்டாடுவார்கள். முக்கியமாக சிறுவர்கள், சிறுமிகளுக்கு விஜய் எப்போதுமே ஃபேவரைட்டாக இருக்கிறார். தனது கரியரின் ஆரம்பத்திலிருந்தே குடும்ப ரசிகர்களை கவரும்படியான விஷயங்கள் தனது படங்களில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் விஜய். ஒருபக்கம் குடும்ப ரசிகர்கள், சிறுவர்கள், சிறுமிகள் மறுபக்கம் இளைஞர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் விஜய்தான் இப்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதன்மையான இடத்திலும் விஜய் இருக்கிறார்.

Vijay S A Chandrasekhar Tamizhaga Vetri Kazhagam

GOAT: அவரது நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதிலும் வெங்கட் பிரபு திரைக்கதையில் ஏதேனும் புதுமை செய்திருப்பார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றிருந்தனர். ஆனால் வழக்கமான கதை, திரைக்கதையை கொடுத்து ஏமாற்றிவிட்டார் வெங்கட் என்று ரசிகர்கள் ஓபனாகவே பேசினார்கள். அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது என்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கொள்ளை லாபம்தான் என்றும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் கூறுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களமிறங்கவிருக்கிறது. இதன் காரணமாக கள பணிகளில் விஜய் தீவிரம் காட்டிவருகிறார். இன்றுகூட தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்துவருகிறது. அதில் கலந்துகொண்ட தளபதி விஜய் மும்மொழி கொள்கைக்கு எதிராக கையெழுத்தும் போட்டார். அதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.

ஜன நாயகன் விஜய்: அரசியலில் முழு கவனமும் அவர் செலுத்திவருவதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தினை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இதுவரை 80 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் அவர் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஸ்.ஏ.சி பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "விஜய் சிறு வயதாக இருந்தபோது ஏதேனும் தவறு செய்தாலோ; ஒழுங்காக படிக்கவில்லை என்றாலோ ஸ்கேலை வைத்துதான் அடிப்பேன். இன்றுவரைக்கும் நான் அவரை குழந்தையாகத்தான் நினைக்கிறேன். எனக்கு அவர் எப்போதும் அப்படித்தான். அவருக்கு எவ்வளவு பெரிய மதிப்பு இருக்கிறது என்பதை எனக்கு வெளியில் மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையை வைத்து புரிந்துகொள்ள முடிகிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X