Vijayakanth - விஜயகாந்த்தை பார்த்து விஜய் அழ இதுதான் காரணம்.. முதன்முறையாக மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த விஜய் வந்தார். அப்போது விஜயகாந்த்தின் உடலை சில நொடிகள் பார்த்தவாறு நின்ற அவர் சட்டென கண் கலங்கினார். அது அங்கிருப்பவர்களை உருக செய்தது. இந்த சூழலில் அதுகுறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த 6 வருடங்களுக்கு மேலாகவே பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில் அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்த அவர் அரசியல், சினிமா ஆகியவைகளிலிருந்து முழுமையாக விலகி வீட்டில் முழு ஓய்வில் இருந்தார். அவ்வப்போது பண்டிகை தினம், பிறந்தநாளில் மட்டும் ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

S.A.Chandrasekhar Talks about Vijayakanth And Vijay Relationship

மீண்டும் உடல்நலக்குறைவு: சூழல் இப்படி இருக்க கடந்த டிசம்பர் மாதத்தில் மீண்டும் அவருக்கு இரண்டு முறை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் தடவை அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனளித்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர் தேமுதிக பொதுக்குழுவில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட சில நாட்களிலேயே மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழப்பு: ஆனால் இந்த முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழநாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. நம்மில் ஒருவரை இழந்துவிட்டோமே என சாமானியர்கள் கண் கலங்கினார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கலங்கிய விஜய்: இதற்கிடையே விஜயகாந்த் இறந்த அன்று நள்ளிரவு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார் விஜய். வந்து விஜயகாந்த்தின் உடலை சில நொடிகள் பார்த்தவாறு நின்றுகொண்டே இருந்தார். அப்போது சட்டென கண்களும் கலங்கிவிட்டார். அது அங்கிருந்த பலரையும் உருக செய்தது. மேலும் விஜயகாந்த் மீது விஜய்க்கு எவ்வளவு பாசமும், நன்றியும் இருக்கிறது என்று ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர்.

எஸ்.ஏ.சி பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரும், அவரை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசினார். அந்தப் பேட்டியில் அவர், "விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் ஒழுங்காக அஞ்சலி செலுத்தாதது நடிகர் சங்கத்துக்குத்தான் அசிங்கமே ஒழிய விஜயகாந்த்துக்கு துளிக்கூட அசிங்கம் இல்லை. அவர் சண்டை போடும்போது மட்டும்தான் 20 பேரை அடித்தாலும் நம்பும்படியாக இருக்கும். ஏனெனில் அவரது உடல் அமைப்பு அப்படி.

S.A.Chandrasekhar Talks about Vijayakanth And Vijay Relationship

விஜய் ஏன் செய்தார்: விஜயகாந்த் உடலை பார்த்து விஜய் கண் கலங்கியதற்கு காரணம் நன்றி விசுவாசம்தான். நாம் இந்த இடத்துக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் அவரும் ஒருவராக இருந்திருக்கிறாரே என நினைத்தால் போதும். அதுதான் கண்களில் கண்ணீராக வந்து அஞ்சலி செலுத்த வைக்கும்" என்றார்.

செந்தூரப்பாண்டி: விஜய் அவருடைய கரியரின் ஆரம்பத்தில் தவித்துக்கொண்டிருக்கும்போது விஜயகாந்த் பீக்கில் இருந்தார். எனவே அவர் விஜய்யுடன் நடித்தால் விஜய்க்கு பிரபல்யம் கிடைக்கும் என்று நினைத்த எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்திடம் கேட்க; அவரும் ஒத்துக்கொண்டு நடித்தார். .அதனாலேயே அந்தப் படம் பல நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X