twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியுடன் மோதும் கேப்டன்!

    By Staff
    |

    கேப்டன் விஜயகாந்த்தின் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள சபரி, மருத்துவ உலகையே ஒரு கலக்கு கலக்கும் என படத்தின் தயாரிப்பாளர் சேலம்சந்திரசேகர் மகா நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

    சுள்ளான் என்ற சூப்பர் டொக்குப் படத்தைக் கொடுத்தவர் சேலம் சந்திரசேகரன். ஆனால் அதே சந்திரசேகரன் கொடுத்த படம்தான் கஜினி.இப்படத்துக்குப் பின்னர் சந்திரசேகரனை வைத்துப் படம் எடுக்க பல நடிகர்களும் ஆசைப்பட்டனர்.

    ஆனால் சுள்ளானைப் போல எடுத்து அவதிப்பட்டு விடக் கூடாது என்பதால் படு நிதானமாக அடியெடுத்து வைத்த சந்திரசேகரன், விஜயகாந்த்தைவைத்து சபரியை உருவாக்கியுள்ளார்.

    இப்படம் விஜயகாந்த்துக்கு இன்னொரு ரமணாவாக அமையும் என்று படம் வளர ஆரம்பித்தபோதே பேச்சு கிளம்பி விட்டது. படம் படுஅற்புதமாக வந்திருக்கிறதாம்.

    சிறப்பாக சபரியை முடித்த திருப்தியில் மார்ச் 16ம் தேதி படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் சந்திரசேகரன். இப்படம்கேப்டனுக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்பதால் அவரது ரசிகர்களும் படு ஆவலாக படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

    சபரி வெளியான சில நாட்களிலேயே (ஏப்ரல் 12) சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜியும் வெளியாகவுள்ளது. எனவே போட்டி படு ஹாட் ஆகஇருக்கும் என்பதே கோலிவுட்டின் டாக் ஆக உள்ளது.

    போட்டி பலமாக இருந்தாலும், உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஜூரம் படு தணலாக இருந்தாலும் அதைப் பற்றி சந்திரசேகரன்கவலைப்படவில்லையாம். சபரி சிறப்பாக வந்துள்ளது. படத்தில் தரம், நல்ல செய்தி உள்ளது. எனவே எது குறுக்கிட்டாலும் எனக்குக்கவலையில்லை. பயப்படவும் இல்லை.

    போட்டிகளைப் பார்த்து பயந்தால் கதைக்கு ஆகாது. நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சபரி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.விஜயகாந்த்துக்கு இந்தப் படமும் ஒரு புதிய முகத்தைக் கொடுக்கும் என்கிறார் படு தில்லாக.

    சபரியோட கதை என்னங்க அய்யா?

    டாக்டர்களின் பிரச்சினைகள், மருத்துவ உலகை ஆட்டிப் படைக்கும் ஊழல் குறித்த கதைதான் சபரியின் கதையாம். விஜயகாந்த் டாக்டராகவருகிறார். அவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் மாலிஷ் மாளவிகா, இன்னொருவர் ஜோரான ஜோதிர்மயி. இருவருக்கும் சூப்பராக நடிக்கும்வாய்ப்பும் இருக்கிறதாம் (இப்படத்தில் தனது கேரக்டரை டம்மி ஆக்கி விட்டதாக சமீபத்தில் மாளவிகா மூக்கைச் சிந்தியது ஞாபகமிருக்கலாம்!).

    அரசு, கம்பீரம் என சரத்குமாரை வைத்து இரு படங்களை இயக்கிய சுரேஷ்தான் சபரியையும் இயக்கியுள்ளார். விஜயகாந்த்துக்கேற்ற கதையாகஅவர் சொன்னபோதே, இம்ப்ரஸ் ஆகி விட்டாராம் கேப்டன்.

    இந்தப் படம் வெளி வந்த பிறகு மருத்துவ உலகையே உலுக்கப் போகிறது பாருங்கள் என்கிறார் சுரேஷ். மக்களிடம் பணம் பறிக்கும் கும்பலாகசெயல்படும் டாக்டர்களின் முகத்திரையை இந்தப் படம் கிழிக்கப் போகிறது. இப்படிப்பட்ட டாக்டர்களிடமிருந்து மக்களைக் காப்பவராகநடித்திருக்கிறார் விஜயகாந்த். டாக்டர் வேடத்தில் விஜயகாந்த் நடித்திருப்பது இதுவே முதல் முறை.

    இந்தப் படத்திற்கு டாக்டர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் இந்தப் படத்துக்கு ஆதரவு தருவார்கள். அதுபோதும் எனக்கு.

    நோயாளிகளுக்கு மட்டும் தீர்வு சொல்பவர்களாக டாக்டர்கள் இருக்கக் கூடாது, சமுதாயத்தையும் அவர்கள் குணப்படுத்துபவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் மூலம் நாங்கள் தரும் செய்தி என்கிறார் சுரேஷ்.

    விஜயகாந்த் இப்படத்தில் மருந்துக்குக் கூட அரசியல் வசனம் பேசவில்லை என்பது டானிக்கான செய்தி!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X