யாரோ போல் நின்ற விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.. மகன் கட்சிக்காரர் செய்த செயல்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விஜய் மொத்தம் இரண்டு தொகுதிகளில் களமிறங்கியிருக்கிறார். எப்படியாவது இந்தத் தேர்தலில் வெல்ல முடியாவிட்டாலும்; தனது வாக்கு சதவீதத்தை காட்டிவிட வேண்டும் என்பதில் முழு முனைப்பாக இருக்கிறார் விஜய். மேலும் பரப்புரையை தீவிரப்படுத்தினாலும் இடை இடையே விடுமுறை எடுத்துக்கொள்வதும் விமர்சனத்தை கிளப்பியது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இப்போது இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இரண்டு பேருக்குமிடையே பிரச்னைகள் வெடித்த சூழலில் எப்படியோ மீண்டும் சேர்ந்துவிட்டார்கள். எல்லோரது வீட்டிலும் தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் சண்டை போல்தான் எங்கள் வீட்டிலும் நடந்தது என கூறினார். அதேசமயம் விஜய் தந்தை, தாய்க்கு எதிராக நீதிமன்றம் சென்ற கதையெல்லாம் முன்னொரு காலத்தில் நடந்தது.

அரசியலில் விஜய்: இப்போது அரசியல் கட்சி தலைவராக விஜய் மாறியிருப்பதற்கும் விதை எஸ்.ஏ.சிதான் போட்டது. அனைத்து குடும்ப பெண்களிடமும் விஜய் சேர வேண்டும் என்ற திட்டத்தில் தொடங்கி; அவரது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி; தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்ய வைத்ததுவரை என ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைக்க வைத்தார். ஆனால் தவெக கட்சியை தொடங்கிய விஜய் தனது தந்தை பக்கத்தில்கூட சேர்க்கவில்லை.
என்ன காரணம்?: விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இருந்த பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன என்றுதான் சொல்லப்பட்டது. கட்சி தொடக்க மாநாட்டுக்கும், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கெல்லாம் சந்திரசேகர் வந்திருந்தார். ஆனால் தொடர்ச்சியாக அவரை தவெக மேடையில் பார்க்க முடிவதில்லை. எனில் அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபம் முழுவதும் நீங்கவில்லையா? அல்லது அரசியலில் தலையிட வேண்டாம் என விஜய் தந்தையிடம் கண்டிஷன் போட்டுவிட்டாரா என தெரியவில்லை.
சங்கீதா விவகாரம் வேறு: ஆனால் புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்.ஏ.சி இன்னமும் வருத்தத்தில்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. தவெக மேடைகளில் அதிகம் வராததற்கு அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இது ஒருப்பக்கம் இருக்க; இன்னொரு பிரச்னையாக சங்கீதா விவகாரம் வந்து நிற்கிறது. அவர்கள் இரண்டு பேரையும் பிரியவிடாமல் செய்ய எவ்வளவோ முயற்சிகளை ஒரு தந்தையாக அவர் எடுத்ததாகவும்; ஆனாலும் பலனளிக்கவில்லை என அந்தத் தரப்புக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
யாரோ போல்: இந்நிலையில் ஒரு விஷயம் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது வேளச்சேரி தொகுதியில் தவெக வேட்பாளர் ரா.குமார் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனது இல்லத்தின் பால்கனியில் டவலோடு எஸ்.ஏ.சந்திரசேகர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பார்த்து குமார் கையசைக்க; பதிலுக்கு எஸ்.ஏ.சியும் கையசைத்து உற்சாகப்படுத்தினார். தன் மகனின் கட்சி வேட்பாளர் பரப்புரை போகும்போது இவர் யாரோ போல் நின்றது பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது என்று இணையத்தில் பதிவுகளை பார்க்க முடிகின்றன.


Click it and Unblock the Notifications















