அதையெல்லாம் முடிவு செய்துதான் விவாகரத்து பெற்றோம்.. ஜிவி பிரகாஷ் பற்றி மனம் திறந்த சைந்தவி
சென்னை: ஜிவி பிரகாஷும் சைந்தவியும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்தார்கள். நீண்ட வருடங்கள் தொடர்ந்து அவர்களது காதல் வீட்டு சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. அந்தத் தம்பதிக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண பந்தம் வருடங்களுக்கு முன்பு முறிந்துபோனது. இந்நிலையில் தங்களது விவாகரத்து குறித்து சைந்தவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருக்கும் விஷயங்கள் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அவர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரிடம் இசை தொடர்பான வேலைகளை செய்தார். அதனையடுத்து வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். எமோஷனல் அதிகம் இருக்கும் அந்தப் படத்தில் தனது அட்டகாசமான இசையால் அனைவரையும் ஈர்த்துவிட்டார். இதன் காரணமாக பெரிய ஹீரோக்களின் படங்களும் அவருக்கு புக் ஆகின. அப்படி அவர் அஜித்தின் கிரீடம், ரஜினியின் குசேலன் என பல படங்களுக்கு வரிசையாக இசையமைத்தார்.

ஹீரோ அவதாரம்: இது ஒருபக்கம் இருக்க அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. அதனை நிறைவேற்றிக்கொண்ட அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். பாலா, ராஜீவ் மேனன், சசி என முக்கியமான இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தாலும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இப்போது செல்வராகவன் இயக்கத்தில் மென்டல் மனதில் என்ற படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்து வெளியான ஹேப்பி ராஜ் திரைப்படமும் மண்ணைத்தான் கவ்வியது.
தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ்: இதற்கிடையே ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்களில் தனித்துவமான இசையை கொடுத்த அவர் தேசிய அளவில் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்தார். இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரிடமும் பேசுபொருளானது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சூர்யா நடித்த சூரரைப் போற்று, தனுஷ் நடித்த வாத்தி ஆகிய படங்களுக்கு இசையமைத்ததற்காக தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடியது.
பெர்சனல் வாழ்க்கையில் அடி: இது ஒருபக்கம் இருக்க அவரது பெர்சனல் வாழ்க்கையும் சர்ச்சையில் சிக்கியது. அதாவது பள்ளியில் படிக்கும்போதே தனது ஜூனியரான சைந்தவியை காதலித்தார் ஜிவி. இரண்டு பேரின் காதலும் நீண்ட வருடங்கள் நீடித்தது. பிறகு வீட்டு சம்மதம் கிடைத்தை அடுத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள்.கோலிவுட்டின் ஃபேவரைட் ரியல் ஜோடிகளில் ஒன்றாக அவர்கள் வலம் வந்துகொண்டிருந்தார்கள். அன்வி என்ற மகள் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் இரண்டு பேரும் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் தங்களது விவாகரத்து குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சைந்தவி, "யாருக்குமே திருமணம் செய்துவிட்டு விவாகரத்து பெற வேண்டும் என்ற ஆசை இருக்காது. இறுதிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் சில காரணங்களால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே இரண்டு பேரும் பேசித்தான் பிரிந்தோம். நண்பர்களாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதேபோல் இன்னமும் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நினைத்துதான் விவாகரத்து செய்தோம். ஒருவர் மீது ஒருவருக்கு இப்போதும் மரியாதை இருக்கிறது. எங்களுக்குள் வெறுப்பும் இல்லை; தேவையில்லாத பேச்சுக்களும் இல்லை. எனக்கு எனது மகள்தான் பாசிட்டிவ் எனர்ஜி" என்றார்.


Click it and Unblock the Notifications
