சாந்தனுவின் சக்கரக்கட்டி
| Click here for more images |
மகளைத் தொடர்ந்து தனது மகன் சாந்தனுவையும் நடிப்பில் இறக்கியுள்ளார் பாக்யராஜ். சாந்தனு நாயகனாக அறிமுகமாகும் படம் சக்கரக்கட்டி. கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபுதான் இப்படத்தை இயக்கியுள்ளார். தாணு தயாரித்துள்ளார்.
சிபி, இஷிதா என இரு ஹீரோயின்கள் இப்படத்தில் சாந்தனுவுடன் ஜோடி போட்டுள்ளனர். படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம்.
இன்னும் ஒரு பாட்டை மட்டும் ஷூட் செய்ய வேண்டியுள்ளதாம். இதுவரை எடுக்கப்பட்ட படத்தை தாணு பார்த்துள்ளார். அவரிடம் படத்தைப் போட்டுக் காட்டியபோது சந்தோஷமாகி விட்டாராம். காரணம் படம் சிறப்பாக வந்துள்ளாம். அதேபோல பாக்யராஜும் படத்தைப் பார்த்து திருப்தி தெரிவித்துள்ளார்.
சாந்தனுவின் பெர்பார்மன்ஸ் அவருக்கு பரம திருப்தியைக் கொடுத்துள்ளதாம். இதையடுத்து தனது இயக்கத்தில் சாந்தனுவை நடிக்க வைக்க தீர்மானித்து அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளாராம்.
வேகமா வாய்யா, வெல்லக்கட்டி!


Click it and Unblock the Notifications











