'கிக்' பார்ட்டிக்கு ரன்பிர் கபூர், தீபிகா படுகோனே வரக் கூடாது: தடை போட்ட சல்மான் கான்?

By Siva

மும்பை: தான் நடித்துள்ள கிக் படத்தின் பார்ட்டிக்கு நடிகர் ரன்பிர் கபூரும், அவரது முன்னாள் காதலி தீபிகா படுகோனேவும் வருவதை சல்மான் கான் விரும்பிவில்லையாம்.

சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்துள்ள படம் கிக். இந்த படம் ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸாகிறது. ரம்ஜான் பண்டிகை சல்மானுக்கு ராசியான நாள் என்று தான் கூற வேண்டும்.

இதுவரை ரம்ஜான் அன்று ரிலீஸான சல்மானின் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

கிக்

கிக்

கிக் படம் ரிலீஸான பிறகு பிரமாண்ட வெற்றி பார்ட்டி கொடுக்க படத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். படமே ரிலீஸாகவில்லை அதற்குள் வெற்றி பார்ட்டியா என்று தானே நினைக்கிறீர்கள்?

நிச்சயம் ஹிட்

நிச்சயம் ஹிட்

படம் முதல் நாள் வசூலிலேயே பட்டையை கிளப்பும் என்றும், படம் நிச்சயம் ஹிட் என்றும் வினியோகஸ்தர்கள் கணித்துள்ளனர். அதனால் தான் தற்போதே பார்ட்டிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ரன்பிர், தீபிகா

ரன்பிர், தீபிகா

கிக் வெற்றி பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள். ஆனால் ரன்பிர் கபூரும், அவரது முன்னாள் காதலியான தீபிகா படுகோனேவும் கலந்து கொள்ள மாட்டார்கள்.

சல்மான்

சல்மான்

பார்ட்டிக்கு ரன்பிரும், தீபிகாவும் வரக் கூடாது என்று சல்மான் கான் கறாராக கூறிவிட்டாராம். அதனால் அவர்கள் இருவர் மட்டும் பார்ட்டிக்கு வர மாட்டார்கள்.

ஏன்?

ஏன்?

சல்மானின் முன்னாள் காதலி கத்ரீனா கைஃபின் தற்போதைய காதலர் ரன்பிர் கபூர். அதனால் அவருக்கு அழைப்பு இல்லை. தீபிகா சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார் என்பது நினைவிருக்கிறதா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X