விவசாயியாக மாறிய பாலிவுட் நடிகர்.. வைரலாகும் வீடியோ !

மும்பை : பாலிவுட்டில் யாராலும் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாகவும், தனது திரைப்படங்களில் கர்ஜிக்கும் சிங்கமாகவும் இருந்து வருபவர் நடிகர் சல்மான் கான்.

மான் வேட்டை உள்ளிட்ட பல சர்ச்சைகளில் தொடர்ந்து இவர் சிக்கி வந்தாலும் இவருக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது.

இந்த நிலையில் தற்போது உள்ள லாக்டவுனில் பலரும் பலவிதமான வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் சல்மான் கான் முழு விவசாயியாக மாறி தன்னுடைய ரசிகர்களை ஆச்சரியபடுத்தியுள்ளார்.

பல கோடி ரசிகர்களை கொண்டு

பல கோடி ரசிகர்களை கொண்டு

அசராத நடிப்பின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சல்மான் கான் பல கோடி ரசிகர்களை கொண்டு இந்திய அளவில் அதிகம் ரசிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கட்டுடலான உடலமைப்புடன் எப்போதும் கெத்தாக வலம் வரும் சல்மான் கான் இந்திய அளவில் தனது படங்களின் மூலம் பல்வேறு வசூல் சாதனையை புரிந்து வருகிறார்.

சிங்கிள் சிங்கமாக கெத்தாக

சிங்கிள் சிங்கமாக கெத்தாக

இந்திய சினிமாவில் இதுவரை பல பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அதிக வசூல் செய்த படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக வலம் வரும் சல்மான்கான். தன்னுடன் பணியாற்றும் பல கதாநாயகிகளுடன் காதலில் இருந்து வருவதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டு வந்த நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இன்றும் சிங்கிள் சிங்கமாக கெத்தாக வலம் வருகிறார்.

முழு நேர விவசாயி

முழு நேர விவசாயி

ஆசிய அளவில் முன்னணி கதாநாயகனாக இருந்துவரும் சல்மான் கான், லாக்டவுன் பொது முடக்கத்தின் காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் பசியால் தவிக்கும் பல்வேறு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்த போட்டோக்களும் வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வந்த நிலையில் தற்பொழுது முழு விவசாயியாக சல்மான் மாறிவிட்டார்.

அனைவரும் வியப்படையும் வகையில்

அனைவரும் வியப்படையும் வகையில்

இப்போது இருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு துறையைச் சேர்ந்த நபர்களும் தற்பொழுது மாற்று வேலையை செய்து வரும் நிலையில், சல்மான் கான் அனைவரும் வியப்படையும் வகையில் முழு விவசாயியாக மாறி உள்ளார்.

கேள்வியால் துளைத்தெடுத்தும்

கேள்வியால் துளைத்தெடுத்தும்

சமீபத்தில் உடல் முழுவதும் சேறுடன் விவசாயிகளை மதியுங்கள் என பதிவிட்டு புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளங்களில் சல்மான் கான் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சல்மான் கானை கேள்வியால் துளைத்தெடுத்தும் கேலி கிண்டல் செய்தும், எந்த ஊரில் விவசாயி இது போன்று சேற்றில் படுத்து புரண்டது போல வேலை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் உண்மையாக உழைக்கும் விவசாயி எவரும் இதுபோன்று உடல் முழுவதும் சேற்றை அப்பிக்கொண்டு புகைப்படங்களை பதிவிட மாட்டார்கள் என பலரும் இவர் மீது விமர்சனங்களை வைத்து கலாய்த்து வந்தனர்.

கவலைப்படாத சல்மான் கான்

கவலைப்படாத சல்மான் கான்

அவ்வாறு இவர் மீது வைக்கப்படும் கேலி கிண்டல்களை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத சல்மான் கான் தற்பொழுது வயல்களில் இறங்கி கெத்து காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

திடீரென விவசாயியாக

திடீரென விவசாயியாக

ஓரிரு நாட்களுக்கு முன்பு வயலை டிராக்டர் மூலம் உழுது அந்த வீடியோவை பதிவிட்டிருந்த சல்மான் கான், தற்பொழுது அவர் உழுத வயலில் நெற்பயிர்களை நட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவ்வாறு திடீரென விவசாயியாக மாறியுள்ள சல்மான்கானுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், சிலர் என்ன ஒரு நடிப்புடா சாமி என தொடர்ந்து கேலி செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X