பிக் பாஸ் சீசன் 7: எபிசோடுக்கு ரூ.5 கோடி வாங்கும் சல்மான் கான்
மும்பை: நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் சீசன் 7 ஐ நடத்த ஒரு எபிசோடுக்கு ரூ.5 கோடி சம்பளமாக பெறவிருக்கிறாராம்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக்ஸ் பாஸ் ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது.
வரும் செப்டம்பர் மாதம் இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும்.

ரூ. 5 கோடி
கடந்த சீசனில் சல்மான் கானுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.2.5 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது துவங்கவுள்ள 7வது சீசனில் ஒரு எபிசோடுக்கு சல்மான் கான் ரூ. 5 கோடி சம்பளம் பெறவிருக்கிறார்.

ரூ.130 கோடி
பிக் பாஸ் 7வது சீசனை நடத்த சல்மான் கானுக்கு ரூ.130 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. வாரத்திற்கு 2 எபிசோடுகள் ஷூட் செய்யப்படும். இந்த சீசனில் அவர் ஏஞ்சல் மற்றும் சாத்தான் என்று இரு வேடங்களில் வருகிறாராம்.

செப்டம்பர் ஏன்?
பிக் பாஸ் ஷோ வழக்கமாக அக்டோபரில் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரில் ஒளிபரப்பாகிறது. தன் மீதான வழக்குகளில் தீர்ப்பு வரும் முன்பு இந்த சீசனை முடிக்க விரும்புகிறாராம் சல்மான். அதனால் தான் இந்த சீசன் முன்கூட்டியே துவங்குகிறது.

ஆமீரை தோற்கடிக்கிறார்
ஆமீர் கான் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ.3 கோடி வாங்கி டிவி நிகழ்ச்சிக்கு அதிகம் சம்பளம் பெறுபவராக இருக்கிறார். இந்நிலையில் எபிசோடுக்கு ரூ.5 கோடி சம்பளத்துடன் சல்மான் கான் தான் டிவி நிகழ்ச்சிக்கு அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம் ஆகி ஆமீரை தோற்கடிக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











