Salman Khan: கொலை மிரட்டல்... சல்மான் கான் வாங்கிய புல்லட் ப்ரூஃப் கார்... விலை இத்தனை கோடியா?

மும்பை: பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இன்னும் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அவர் நடித்துள்ள Kisi Ka Bhai Kisi Ki Jaan திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதனிடையே சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இதனால், இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அதிநவீன கார் ஒன்றை பல கோடி ரூபாய் செலவில் மும்பைக்கு வரவைத்துள்ளாராம்.

 Salman Khan bought a bullet-proof car worth 2 crores due to death threats

சல்மான் கான் வாங்கிய நிசான் பேட்ரோல் எஸ்யூவி

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தற்போது Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் ஸ்பெஷலாக சல்மான் கானின் படங்கள் வெளியாவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு Kisi Ka Bhai Kisi Ki Jaan திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், சல்மான் கான் வெளிநாட்டில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய புல்லட் ப்ரூஃப் காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்துள்ளார். நிசான் பேட்ரோல் எஸ்யூவி ரக காரான இது, இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்னர் சல்மான் கானின் இ-மெயிலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

 Salman Khan bought a bullet-proof car worth 2 crores due to death threats

இதுகுறித்து, மும்பை போலீஸாரும் லுனி பகுதி காவல் துறையினரும் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும், ஜோத்பூர் மாவட்டம் லுனியைச் சேர்ந்த தக்காட் ராம் என்பவரையும் கைது செய்தனர். அதேபோல், மேற்கு பந்தாரா பகுதியில் உள்ள சல்மான் கானின் வீட்டுக்கும் Y+ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடிக்கடி சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே சல்மான் கான் நிசான் பேட்ரோல் காரை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவியை பயன்படுத்தி வந்தார் சல்மான் கான், ஆனால், அதில் சல்மான் கான் தான் தனியாக புல்லட் ப்ரூஃப் பொறுத்தியிருந்தாராம். டொயோட்டா நிறுவனம் தற்போது புல்லட் ப்ரூஃப் பொருத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதில்லை. அதனால் தான் நிசான் பேட்ரோல் கார் வாங்கியுள்ளார் சல்மான் கான்.

 Salman Khan bought a bullet-proof car worth 2 crores due to death threats

இந்த காரின் ஜன்னல்களில் வழக்கமான கார்களில் காணப்படுவதை விட தடிமனான கண்ணாடியுடன், அதன் மேல் இன்னும் தடிமனான ஷீட் ஒட்டப்பட்டுள்ளன. இது ஹை-டெக்கான புல்லட் ப்ரூஃப் என சொல்லப்படுகிறது. மேலும், சல்மான் கானின் நிசான் கார் 405hp, 560Nm டார்க் ஆற்றல் உடையதாம். 5.6 லிட்டர் V8 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்கும் இந்த கார், 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த காரின் ஷோரூம் விலை மட்டுமே 2 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய பல லட்சம் வரி கட்டியுள்ளாராம் சல்மான் கான். இதனையடுத்து கடந்த சில தினங்களாகவே புதிய நிசான் பேட்ரோல் காரில் தான் சல்மான் கான் வலம் வருகிறார். இந்த வீடியோ யூடியூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த கார் தவிர Lexus LX 470, Mercedes Benz S-Class, Audi A8, Porsche Cayenne, Range Rover Autobiography, Audi RS7, Mercedes AMG GLE 63 S, Mercedes Benz GL-Class போன்ற கார்களையும் தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார் சல்மான் கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X