சல்மான் மாமாவின் ‘சேட்டை’ முகத்தைப் பாருங்களேன்....
மும்பை: சல்மான் என்றாலே அடிதடி, அதிரடி, கோபம் என்றுதான் எல்லோருக்கும் தோன்றுகிறது. ஆனால் சல்மானின் ஜாலி பக்கம் நிறையப் பேருக்குத் தெரியாது.
தனது சகோதரர்களின் வீட்டில் ரக்ஷாபந்தன் கொண்டாட போயிருந்த இடத்தில் தனது ஜாலியான போக்கையும் வெளிக்காட்டினார் சல்மான்.
அங்கிருந்த குழந்தைகளைச் சீண்டியும், விளையாடியும் தனது மென்மையான மறுபக்கத்தைக் காட்டி விட்டு வந்துள்ளார் இந்த பாடிகார்ட்.

சொஹைல்கான்- அர்பாஸ் கான்
சல்மானின் சகோதரர்கள் சொஹைல் கான் மற்றும் அர்பாஸ் கான். இவர்களது வீட்டுக்குத்தான் இந்த முறை ரக்ஷாபந்தன் கொண்டாட போயிருந்தார் சல்மான்.

நல்லதொரு குடும்பம்
சல்மானின் வருகையைத் தொடர்ந்து இரு குடும்பங்களையும் சேர்ந்த அத்தனை பேரும் கூடி விட்டனர்.

தங்கை குழந்தையிடம் சில்மிஷம்
சல்மான் கானின் தங்கை அல்வி அக்னித்ரி. இவரது வீட்டுக்கும் போயிருந்தார் சல்மான். அங்கு தனது தங்கையின் குழந்தையின் சட்டையைப் பிடித்து இழுத்தும், காலால் மெல்ல செல்லமாக தட்டியும் விளையாட்டுக் காட்டியதைப் பார்த்து குடும்பத்தினர் ரசித்தனர்.

கேமராவைப் பாருடா செல்லம்
மேலும் அந்தக் குழந்தையிடம் இங்க பாரு போட்டோ எடுக்கிறாங்க, கேமராவைப் பாரு என்றும் திருப்பிப் பிடித்து நிற்க வைக்க முயற்சித்தார்.

செல்லமான மாமா
சல்மான் என்றால் சண்டைக்கார மாமா என்று இனி அக்குழந்தை நிச்சயம் சொல்லாதுதானே...


Click it and Unblock the Notifications











