ஜம்மு காஷ்மீர் வெள்ளம்: ரூ. 50 லட்சம் நிவாரணநிதி அளித்த சல்மான் கான்

டெல்லி: ஜம்மு காஷ்மீரி வெள்ள நிவாரணநிதியாக ரூ. 50 லட்சம் அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால், பலத்த சேதாரத்தைச் சந்தித்துள்ளது அம்மாநிலம். தொடர்ந்து அங்கு இயல்பு நிலையைக் கொண்டுவர அம்மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

Salman Khan donates Rs 50 lakh for Jammu and Kashmir flood victims

இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரணநிதி வந்து குவிந்து வருகிறது. அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகரான சல்மான்கான் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார்.

இவ்வாறு இயற்கைப் பேரழிவிற்கு நிவாரணநிதி அளிப்பது சல்மான்கானிற்கு முதல்முறை அல்ல. ‘பீயிங் ஹியூமன்' என்ற பெயரில் என்.ஜி.ஓ. நடத்தி வரும் சல்மான், முன்னதாக இது போன்ற பல இயற்கைப் பேரழிவுகளின் போதும் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.

பாலிவுட்டில் சல்மான் மட்டுமின்றி ஹிரித்திக் ரோஷன், குணால் கபூர், ஷாகித் கபூர் ஆகியோரும் ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X