காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் தனது காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
54வயதாகும் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பல பாலிவுட் முன்னணி நடிகைகளுடன் சல்மான் கான் டேட்டிங் சென்றுள்ளதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அவரை சுற்றி வலம் வந்தன.

சமீபத்தில் கூட ஊர்வசி ரவுத்தேலாவுடன் நடிகர் சல்மான் கான் டேட்டிங் சென்றதாக தகவல்கள் வைரலாகின.
லாக் டவுன் நேரத்தில் அப்படி எந்த காதலியுடன் சல்மான் கான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டார் என்ற கேள்வி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கத்தான் செய்யும், தனது பண்ணை வீட்டில் வளரும் செல்லப் பிராணியான குதிரைக்கு உணவளித்ததைத் தான் சல்மான் கான் இப்படியொரு கேப்ஷனோடு பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
View this post on InstagramA post shared by Salman Khan (@beingsalmankhan) on
மேலும், சில இலை தலைகளை சல்மான் கான் குதிரையுடன் இணைந்து சாப்பிடும் வீடியோ பாலிவுட் ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான அரசின் போராட்டத்தில் தனது பங்கையும் அளித்து வரும் சல்மான் கான், காலியாக இருக்கும் மசூதி ஒன்றின் புகைப்படத்தையும், படா கபரிஸ்தான் கேட் எனும் பிரபலமான சுடுகாடு ஒன்றின் புகைப்படத்தையும் பதிவிட்டு, ஆட்கள் நடமாட்டம் இன்றி, அனைவரும் அரசு சொல்வதை கேட்டு நடப்பது நல்ல விஷயம். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்ற அறிவுரையையும் நடிகர் சல்மான் கூறியுள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக ரிலீசான சல்மான் கானின் தபங் 3 படம் குடியுரிமை சட்ட போராட்டத்தால் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை ஈட்டவில்லை. மேலும், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் ராதே படத்தில் நடித்து வரும் சல்மான் கான், கொரோனா லாக் டவுனால் ஷூட்டிங் இன்றி ஓய்வெடுத்து வருகிறார். ராதே படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











