நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கு 3 பெட்ரூம் ஃபிளாட்டை பரிசளித்த சல்மான் கான்
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னுடன் கிக் படத்தில் நடித்துள்ள ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கு 3 பெட்ரூம் ஃபிளாட் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம்.
நடிகர் சல்மான் கான் கடந்த 2009ம் ஆண்டு தெலுங்கில் ஹிட்டான கிக் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்தியிலும் கிக் என்றே பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்துள்ளார்.
படம் ரம்ஜான் பண்டிகையின்போது ரிலீஸாக உள்ளது.

ஜாக்குலின்
கிக் படத்தில் நடிக்கையில் ஜாக்குலினுக்கும் சல்மான் கானுக்கும் இடையே காதல் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் சல்மானுடன் ஒரு நடிகையின் பெயரை சேர்த்து கிசுகிசுப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

வீடு பரிசு
சல்மான் ஜாக்குலினுக்கு மும்பை பந்த்ரா பகுதியில் 3 பெட்ரூம் ஃபிளாட் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளாராம். அண்மையில் ஜாக்குலின் குடியேறிய வீடு சல்மான் பரிசாக அளித்தது தான் என்று கூறப்படுகிறது.

அசின்
ரெடி படத்தில் தன்னுடன் நடித்த அசினுக்கும் ஒரு ஃபிளாட்டை சல்மான் கான் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுகள்
சல்மான் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு விலை உயர்ந்த பரிசுகள் அளிப்பார் என்பது பாலிவுட் அறிந்ததே. திடீர் திடீர் என்று இப்படி பரிசுகள் கொடுத்து அசத்துவது சல்மானின் ஸ்டைல் ஆகும்.


Click it and Unblock the Notifications











