twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார் விபத்து வழக்கு: சல்மான் கானை நெருங்கிக் கொண்டிருக்கும் சிறை தண்டனை

    By Siva
    |

    மும்பை: 2002ல் காரை சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தியபோது பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் இருந்தார் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் காரை ஓட்டிச் சென்ற நடிகர் சல்மான் கான் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றிவிட்டு சென்றார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கராத் நீதிமன்றத்தில் கூறுகையில்,

    சல்மான்

    சல்மான்

    சம்பவம் நடந்த அன்று சலல்மான் கானும், அவரது நண்பர் கமால் கானும் காரில் இருந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு காயம் அடைந்தவர்களுக்கு உதவக் கூட முன்வராமல் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

    குடிபோதை

    குடிபோதை

    விபத்தை ஏற்படுத்தியபோது சல்மான் கான் தான் காரை ஓட்டியுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் அவரால் காரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதற்கு ஆதாரங்களும் உள்ளன.

    ரத்த மாதிரி

    ரத்த மாதிரி

    சல்மானிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரியில் 100 மில்லி ரத்தத்தில் 62 மில்லிகிராம் மது இருந்தது. அவரது ரத்த மாதிரி பரிசோதனையில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை.

    கார்

    கார்

    காரில் மெக்கானிக்கல் கோளாறு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கும் என்கிறார்களே. அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் காரை பரிசோதனை செய்த வாகன போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அது நல்ல நிலைமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பொய்

    பொய்

    சல்மான் கானின் டிரைவர் அசோக் சிங் சம்பவம் நடந்த அன்று நான் தான் காரை ஓட்டினேன் என்று நீதிமன்றத்தில் கூறியது பொய் ஆகும். பொய் சாட்சி சொன்ன அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கராத்.

    English summary
    Attempting to further nail Salman Khan in the 2002 hit-and-run case, the prosecution on Wednesday cited evidence to prove that the Bollywood star was indeed under the influence of alcohol and his Toyota Land Cruiser vehicle did not have any mechanical defects.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X