என்னை விட சல்மான் தான் பெரிய நடிகர்: ஆமீர் கான்
மும்பை: தன்னை விட சல்மான் கான் தான் பெரிய நடிகர் என்று ஆமீர் கான் தெரிவித்தார். மேலும் சல்மான் பெல்ட்டை ஆட்டி, கண்ணாடியை அசைத்தால் படம் ஹிட்டாகிவிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தி நடிகர் ஆமீர் கான் கதையை பார்த்து பார்த்து தேர்வு செய்வார். ஆண்டுக்கு ஒரு படத்தில் தான் நடிப்பார். அவர் வில்லனாக நடித்துள்ள தூம் 3 வரும் 20ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆமீர் சல்மான் கானை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சல்மான் கான்
சல்மான் கான் என்னை விட பெரிய நடிகர். அவர் என்னுடைய நண்பர். நான் ஒரு படத்தில் நடிக்க ஏகப்பட்ட பயிற்சி தேவைப்படுகிறது. ஆனால் அவர் பெல்ட்டை ஆட்டி, கண்ணாடியை அசைத்தால் படம் ஹிட்டாகிவிடும். அவருக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் ஆமீர்.

குடும்பம்
என் குழந்தைகள், குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடவில்லை என்ற உணர்வு எப்பொழுதுமே உள்ளது. இந்த குற்ற உணவர்வோடு தான் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளேன். நான் வேலையில் மூழ்கிவிடுவதால் எனக்கு வேறு எதுவும் தெரிவதில்லை. ஆனால் நான் ஒரு நல்ல தந்தை மற்றும் கணவனாக உள்ளேன் என்று ஆமீர் தெரிவித்தார்.

ஆசாத்
ஆசாத் எங்கள் வாழ்வில் வந்தது ஆசிர்வாதம். அவன் தற்போது ப்ளே ஸ்கூல் போகிறான். முன்பெல்லாம் நான் வேலைக்கு கிளம்பினால் என்னை விட மாட்டேன் என்பான். அதனால் அவனையும் ஷூட்டிங்கிற்கு தூக்கிச் செல்வேன் என்று ஆமீர் கூறினார். ஆசாத் வாடகை தாய் மூலம் பிறந்த மகன். அண்மையில் தான் ஆசாத்தின் 2வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குணம்
போட்டிபோடுவது என் குணம் இல்லை. அடுத்தவர்களின் வேலையை பார்த்துவிட்டு அவரால் மட்டும் எப்படி முடிந்தது, நான் எப்பொழுது அப்படி செய்வது இது போன்றெல்லாம் எனக்கு தோன்றாது. பிறரின் படங்களை பார்த்து நான் சந்தோஷம் தான் படுவேன் என்றார் ஆமீர்.

கூச்ச சுபாவம்
தூம் 3 படத்திற்காக நீங்கள் ஆடிய நடனத்தை ஆடிக் காட்டுங்கள், அப்படியே இந்த படத்திற்காக ஏற்றி ஜிம் பாடியையும் கொஞ்சம் காட்டுங்கள் என்று நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. அதற்கு ஆமீர் மறுத்துவிட்டார். இதுவே சல்மான் கானாக இருந்தால் டான்ஸ் ஆடியதோடு சிக்ஸ் பாக்கையும் காட்டியிருப்பார். ஆனால் நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன் என்று ஆமீர் கூறினார்.


Click it and Unblock the Notifications











