என்னைக் கவரவில்லையே ஆம் ஆத்மி... சல்மான் கான்

By Sudha

மும்பை: ஆம் ஆத்மி மீது தனக்கு ஈர்ப்பு வரவில்லை என்றும், அதன் செயல்பாடுகள் தனக்கு திருப்தி தரவில்லை என்றும் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

ஊழல் ஊழல் என்று குற்றம் சாட்டுகிறது ஆம் ஆத்மி. அது சரியல்ல. மாறாக அந்த ஊழலை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் அக்கட்சி. அதை விட்டு விட்டு மற்றவர்களைக் குற்றம் சாட்டுவது தவறு என்றும் சல்மான் கூறியுள்ளார்.

இவரது புதிய படமான ஜெய்ஹோ-வில் ஆம் ஆத்மியை வைத்து ஒரு பாடலையும் போட்டுள்ளார் சல்மான் கான். ஆனால் அந்தப் பாடலை எந்த அரசியல் கட்சியும் எடுத்தாளக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜெய்ஹோ சல்மான்

ஜெய்ஹோ சல்மான்

சல்மான் கான் ஜெய்ஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். இதை அவரது தம்பியான சோஹைல் கான்தான் இயக்கியுள்ளார்.

ஆம் ஆத்மி உடாஸ் ஹை...

ஆம் ஆத்மி உடாஸ் ஹை...

இப்படத்தில் ஆம் ஆத்மி உடாஸ் ஹை... பாக்கி சப் பர்ஸ்ட் கிளாஸ் ஹை என்று ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடலுக்காக மும்பையில் செட் போட்டுப் படமாக்கியுள்ளனர்.

ஆம் ஆத்மி போக்கு சரியில்லையே...

ஆம் ஆத்மி போக்கு சரியில்லையே...

ஆம் ஆத்மி மீது சல்மானுக்கு பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லையாம். அதை அவரே கூறியுள்ளார். மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போதுதான் தனது அதிருப்தியை சல்மான் வெளியிட்டார்.

சும்மா குற்றம் சாட்டுவது தப்பு பாஸ்

சும்மா குற்றம் சாட்டுவது தப்பு பாஸ்

இதுகுறித்து சல்மான் கூறுகையில், நாட்டில் ஊழல் மலிந்து விட்டது. நிர்வாகமே கெட்டு விட்டது என்று குற்றம் சாட்டுகிறது ஆம் ஆத்மி. அது தவறு. மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு அதை சரி செய்ய முயல்வதே நல்ல குடிமகனுக்கு அழகு.

சாமானியர்களுக்கு தலைவர்கள் எதற்கு

சாமானியர்களுக்கு தலைவர்கள் எதற்கு

ஆம் ஆத்மிக்கு அதாவது சாமானியர்களுக்கு தலைவர்களே தேவையில்லை. அவர்களே நினைத்தால் எதையும் சாதிக்கலாம், மாற்றத்தைக் கொண்டு வரலாம். எனவே கட்சியோ, தலைவர்களோ ஆம் ஆத்மிக்குத் தேவையே இல்லை என்பதே எனது கருத்து.

மக்கள் என்ன ஆட்டு மந்தையா..

மக்கள் என்ன ஆட்டு மந்தையா..

மக்கள் ஏதோ ஆட்டு மந்தை போல நினைத்து சிலர் செயல்படுகிறார்கள். மேய்ப்பர்களாக தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். இது தவறு என்றார் சல்மான்.

நிரூபிக்கட்டும் கேஜ்ரிவால்

நிரூபிக்கட்டும் கேஜ்ரிவால்

தொடர்ந்து ஆம் ஆத்மி குறித்தே செய்தியாளர்கள் கேட்டதால் சல்மான் கடுப்பானார். அவர்களை மறித்து, டெல்லியில் ஆம் ஆத்மி வென்றுள்ளது. ஆனால் கேஜ்ரிவால் தான் ஒரு செயல்படும் மனிதர் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். அதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று மட்டும் கூறி விட்டு பேட்டியை முடித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X