'கிக்'குக்காக 40வது மாடியில் இருந்து தொங்கிய நடிகர் சல்மான் கான்
மும்பை: நடிகர் சல்மான் கான் கிக் என்ற படத்திற்காக 40வது மாடியில் இருந்து தொங்கியவாறு ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
நடிகர் சல்மான் கான், ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சேர்ந்து கிக் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். படத்தை சாஜித் நாதியத்வாலா இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு போலாந்தில் நடந்து வருகிறது.

ஆக்ஷன்
போலாந்தில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். சல்மான் ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

உயரமான கட்டிடம்
போலந்திலேயே உயரமான கட்டிடமான பேலஸ் ஆப் கல்ச்சர் அன்ட் சயன்ஸ் கட்டிடத்தின் 40வது மாடியில் ஒரு காட்சியை படமாக்கினர்.

40வது மாடி
பேலஸ் ஆப் கல்ச்சர் அன்ட் சயன்ஸ் கட்டிடத்தின் 40வது மாடியில் இருந்து தொங்கியபடி சல்மான் கான் நடித்தார். இந்த காட்சியை படமாக்க 5 மணிநேரம் ஆனது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
சல்மான் மாடியில் இருந்து தொங்கிய காட்சியை படமாக்கும்போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தபோதிலும் காட்சி முடியும் வரை படக்குழுவினர் ஒருவித பயத்திலேயே இருந்தனர். சல்மான் என்னவோ பயமில்லாமல் தான் தொங்கினார். ஆனால் படக்குழுவினர் தான் படபடத்துவிட்டனர்.

ரம்ஜான்
கிக் படம் ரம்ஜான் பண்டிகை விருந்தாக ரிலீஸாக உள்ளது. ரம்ஜான் பண்டிகை சல்மான் கானுக்கு மிகவும் ராசியானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











