»   »  அடுத்து தபாங் 3 யை கையில் எடுக்கும் சல்லு பாய்!

அடுத்து தபாங் 3 யை கையில் எடுக்கும் சல்லு பாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சல்மான் கானுக்கு இந்த ஆண்டு சுக்கிர திசை போல... முதலில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இருந்து வெளியே வந்தார். இப்போது மான் சுடப்பட்ட வழக்கில் இருந்தும் வெளியே வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த சுல்தான் படமும் ப்ளாக்பஸ்டர் அடித்திருக்கிறது.

Salman Khan plans to make Dabang 3

பாகுபலி சாதனையை தாண்டி நடைபோடும் சுல்தானின் வெற்றி சல்லுவை தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறது. அடுத்ததாக தனது ஃபேவரிட் தபாங் படத்தின் மூன்றாவது பார்ட்டை எடுத்து நடிக்கவிருக்கிறார். சல்மான் கானின் சகோதரர் அர்ஃபாஸ் கான் திரைக்கதை எழுதுவதில் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் ஷூட்டிங்.

முந்தைய பாகங்களில் ஹீரோயினாக நடித்த சோனாக்‌ஷி சின்ஹாவை மட்டும் மாற்றிவிட்டு வேறு நாயகியை களம் இறக்கப்போகிறாராம்.

English summary
After the blockbuster Sultan, Salman Khan is preparing for the third sequel of his Dabang.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil