வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: சல்மான் கான் ஆப்சென்ட்
மும்பை: சல்மான் கான் இல்லாமல் அவரது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் வீட்டில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடினர்.
ஆனால் இந்த கொண்டாட்டத்தில் சல்மானை பார்க்க முடியவில்லை.

வெளிநாடு
சல்மான் கான் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய சென்றுவிட்டார்.

நடனம்
சல்மான் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மேலதாளங்கள் முழங்க கான் குடும்பத்தினர் நடனம் ஆடினர்.

சொஹைல்
கொண்டாட்டத்தில் சல்மானின் தம்பி சொஹைல் கான், தங்கை அல்விரா, தம்பியின் மனைவி மலாய்கா அரோரா கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் காதலி
சல்மான் கானின் முன்னாள் காதலியான சங்கீதா பிஜ்லானி, தற்போது கிசுகிசுக்கப்படும் காதலி எலி அவ்ரம் மற்றும் நடிகை டெய்சி ஷா உள்ளிட்டோரும் கான் குடும்பத்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











