»   »  50வது பிறந்தநாள் பார்ட்டியில் வின் டீசலாக மாறிய சல்மான் கான்

50வது பிறந்தநாள் பார்ட்டியில் வின் டீசலாக மாறிய சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 50வது பிறந்தநாள் அன்று புகைப்படத்திற்கு கொடுத்த ஒரு போஸ் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளை குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரசிகர்கள் 400 அடி நீள கேக் வெட்டி கொண்டாடினர். சும்மாவே பார்ட்டி கொடுக்கும் சல்மானின் பிறந்தநாள் அன்று பார்ட்டி இல்லாமலா, கண்டிப்பாக உண்டு.

சல்மான் அளித்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள், அவரது முன்னாள் காதலிகள் கலந்து கொண்டனர்.

சானியா

50?? சிலருக்கு வயது வெறும் எண் தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சல்மான் கான் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ட்வீட் செய்து பார்ட்டியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சல்மான்

சல்மான் கான் ஹாலிவுட் நடிகர் வின் டீசல் போன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அது என்ன வின் டீசல் போஸ் என்று நினைக்கிறீர்களா?

தீபிகா

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹாலிவுட் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வின் டீசலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் வின் டீசல் கொடுத்த போஸை தான் சல்மான் தற்போது கொடுத்துள்ளார்.

கிண்டல்

கிண்டல்

தீபிகா வின் டீசலுடன் அளித்த போஸை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் அதை கிண்டல் செய்வது போன்று நடிகர்கள் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.

English summary
Salman Khan has given a funny pose for a photo on his 50th birthday. He did a Vin Diesel for a particular photo.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil