இந்த ரம்ஜானும் சல்மான் கானுக்கு ராசியானது: ரூ.100 கோடி வசூலித்த 'கிக்'
மும்பை: சல்மான் கான் நடிப்பில் வெளியான கிக் படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.
சஜித் நாதியத்வாலா இயக்கத்தில் சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்த கிக் படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி கடந்த 25ம் தேதி வெளியானது. படம் ரிலீஸான அன்று ரூ. 27 கோடி கோடி வசூல் செய்தது.
இது சல்மான் கான் படத்திற்கு புதிது ஒன்றும் அல்ல.

2 நாட்களில்
கிக் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்தது.

ரம்ஜான்
படம் ரிலீஸாகி ரம்ஜான் அன்று வரை அதாவது 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

தூம் 3
ஆமீர் கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸான தூம் 3 வெறும் 3 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்தது.

வேகமாக
பாலிவுட்டிலேயே ரிலீஸான வேகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த படம் என்றால் அது தூம் 3 தான்.

ராசி
சல்மான் கானுக்கும், ரம்ஜான் பண்டிகைக்கும் ராசி என்று தான் கூற வேண்டும். ரம்ஜான் பண்டிகை தினத்தன்று அல்லது பண்டிகையொட்டி ரிலீஸ் செய்யப்படும் அவரது படங்கள் ரூ.100 கோடி வசூலிக்கின்றன.

பாகிஸ்தான்
கிக் படம் பாகிஸ்தான் பாக் ஆபீஸில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











