உன் கண் அப்படியே 'ஐஸ்' மாதிரியே இருக்கு.. பழைய நினைவுகளில் மூழ்கிய சல்மான்!
மும்பை: சல்மான் கான் இன்னும் ஐஸ்வர்யா ராயின் நினைப்பிலேயே இருப்பதாக தெரிகிறது. பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள நடிகை ஷில்பா சக்லானியிடம் பேசியபோது உன்னுடைய கண்கள் அப்படியே ஐஸ்வர்யாவின் கண்கள் போலவே இருப்பதாக அவர் மெய்மறந்து பேசியது இதையே வெளிக்காட்டுவதாக உள்ளது.
ஐஸ்வர்யா ராயும், சல்மான் கானும் ஒரு காலத்தில் தீவிரமாகக் காதலித்தவர்கள் என்பது பழைய செய்தி.
ஆனால் சல்மான் கானின் முரட்டுத்தனமான போக்கால் அதிருப்தி அடைந்த ஐஸ்வர்யா தனது காதலைத் துறந்து விட்டார். பின்னர் அபிஷேக் பச்சனை மணந்தார்.

இன்னும் ஐஸ் நினைவில்...
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் நினைவில் இன்னும் சல்மான் இருக்கிறார் என்று எண்ணும் வகையில் அவரது சமீபத்திய பேச்சு அமைந்துள்ளது.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7வது அத்தியாயம் தற்போது நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களிடம் சல்மான் கான் உரையாடினார்.

அப்படியே ஐஸ் மாதிரி...
அப்போது நடிகை ஷில்பா சக்லானியிடம் பேசிய சல்மான் கான், அவரது கண்களைப் பார்த்துப் புகழ்ந்து பேசினார். சல்மான் கூறுகையில், உனது கண்கள் அப்படியே ஐஸ்வர்யாவுக்கு இருப்பது போலவே இருக்கிறது. உன்னைப் பார்த்தாலும் ஐஸ்வர்யா மாதிரியே இருக்கிறது என்று கூறினார் சல்மான்.

அதனால்தான் உன்னை மணந்தாரா அபூர்வா..
தொடர்ந்து, நீ ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதால்தான் உன்னை மணந்து கொண்டாரா உனது கணவர் அபூர்வா அக்னிஹோத்ரி என்றும் கேட்டுள்ளார் சல்மான் கான்.

முழுப் பெயரையும் சொன்னார்...
இதைக் கேட்டதும் ஷில்பாவுக்கு ஆச்சரியம். சல்மானை விழி விரியப் பார்த்தார். அதைப் பார்த்த சல்மான் டக்கென சுதாரித்துக் கொண்டு, ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று முழுப் பெயரையும் சொல்லி நிறுத்தினார்.
பழைய நினைப்பா பாடிகார்ட்...??


Click it and Unblock the Notifications











