'கிக்'குக்காக சோட்டா பீமுடன் கைகோர்த்த சல்மான் கான்
மும்பை: கிக் படத்தை விளம்பரப்படுத்த சல்மான் கான் சோட்டா பீமுடன் கைக்கோர்த்துள்ளார்.
சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்துள்ள படம் கிக். தெலுங்கு படமான கிக்கின் ரீமேக் தான் இந்த படம். படத்தை விளம்பரப்படுத்துவதில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்.
குட்டீஸ்களை கவர புதிய திட்டம் தீட்டி அதற்கு செயல் வடிவம் கொடுத்துள்ளனர்.

சோட்டா பீம்
வீட்டுக்கு வீடு நண்டு சுண்டு எல்லாம் டிவியை போட்டால் சோட்டா பீம் தான் பார்க்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இதை கிக் படக்குழுவினரும் கவனிக்கத் தவறவில்லை.

கூட்டணி
சல்மான் கான் போகோ தொலைக்காட்சியுடன் கை கோர்த்துள்ளார். இந்த போகோ இந்திய குட்டீஸ்களுக்காக உருவாக்கிய அனிமேஷன் கதாபாத்திரம் தான் சோட்டா பீம்.

பீம் அவ்ர் சல்மான்
சல்மானும், சோட்டா பீமும் வரும் பீம் அவ்ர் சல்மான் கி கிக் என்ற அந்த 90 நிமிட ஆக்ஷன் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி ஒளிபரப்பாகிறது.

வில்லன்கள்
சோட்டா பீம் வில்லன்களை சல்மான் கான் போன்று துவைத்து காயப்போடப் போகிறார். சோட்டா பீமை போன்று சல்மான் கான் டாப்லெஸ்ஸாக வருவது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சும்மாவே
சும்மாவே சல்மான் கான் ஸ்டைலாக தான் வில்லன்களை பந்தாடுவார் இதில் சோட்டா பீமுடன் வேறு கூட்டணியா?


Click it and Unblock the Notifications











