»   »  சல்மான் கானும் அவரது டேட்டிங் லூட்டிகளும்..

சல்மான் கானும் அவரது டேட்டிங் லூட்டிகளும்..

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் லேட்டஸ்ட் காதலி ஏமி ஜாக்சன் என்று கூறப்படுகிறது.

50 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். பாலிவுட்டின் வெற்றி நாயகனாக வலம் வரும் அவர் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் அவரும், அவரது காதலியான ரோமானியாவை சேர்ந்த நடிகை லூலியா வந்தூரும் பிரிந்துவிட்டனர்.

ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

லாலுயாவை பிரிந்த சல்மான் கானும், நடிகை ஏமி ஜாக்சனும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். ஆக சல்மான் வாழ்வில் வந்துள்ள லேட்டஸ்ட் காதலி ஏமி.

காதலிகள்

காதலிகள்

சல்மான் கானுக்கு திருமணம் ஆகவில்லையே தவிர அவரது வாழ்வில் பல முறை காதல் வந்துவிட்டது. அவர் வாழ்க்கையில் காதலிகள் வருவதும் போவதுமாக உள்ளார்களே தவிர யாரும் அவரை திருமணம் செய்யவில்லை.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

நடிகைகள் சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், லூலியா வந்தூர் என சல்மான் கான் காதலித்த யாரும் அவரை திருமணம் செய்யவில்லை.

சல்மான் கான்

சல்மான் கான்

கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் நடிக்க வந்த புதிதில் சல்மான் கானை காதலித்தார். ஓரளவு வளர்ந்த பிறகு சல்மானை விட்டுவிட்டு ரன்பிர் கபூரிடம் சென்றுவிட்டார். இதனால் ஏமியும் பாலிவுட்டில் தனது வளர்ச்சியை மனதில் வைத்து சல்மானுடன் நட்பாக பழகலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

English summary
Bollywood actor Salman Khan is reportedly dating Amy Jackson. Amy who is trying her luck in Bollywood is close to Salman Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil