»   »  2 மாதத்திற்குள்... சல்மான் கானுக்கு கெடு விதித்த குடும்பம்!

2 மாதத்திற்குள்... சல்மான் கானுக்கு கெடு விதித்த குடும்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் பற்றி முடிவு செய்யுமாறு பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அவரது குடும்பத்தார் கெடு விதித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் காதல் வாழ்க்கை பற்றி மறுபடியும் எழுத வேண்டிய கட்டாயம். அதை படித்தே தீருவதை தவிர உங்களுக்கு வேறு வழியே இல்லை. இப்பொழுது எதற்கு அவரது காதல் வாழ்க்கையை மறுபடியும் படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் காரணம் உள்ளது.

அதனால் தான் ஏற்கனவே பலமுறை கூறிய விஷயத்தை மறுபடியும் நினைவுகூர்கிறோம். உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பாததால் சுறுக்கமாக சொல்லி விடுகிறோம்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

உலக அழகி ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் என சல்மான் கான் வாழ்வில் வந்த காதலிகள் ஏராளம் ஏராளம். ஆனால் யாரும் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் 50 வயதாகியும் சிங்கிளாகவே உள்ளார்.

லூலியா

லூலியா

சல்மான் தற்போது ரோமானியாவை சேர்ந்த மாடலும், நடிகையுமான லூலியா வன்டூரை காதலித்து வருகிறார். லூலியாவும், சல்மானும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கடந்த ஆண்டில் இருந்தே பேசப்படுகிறது.

சல்லு

சல்லு

சல்மான் கானுக்கு திருமணம் செய்து வைப்பது என்று அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து லூலியாவை திருமணம் செய்து கொள்ளும் தேதியை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தெரிவிக்குமாறு சல்மானுக்கு அவரது குடும்பத்தினர் அன்புக் கட்டளையிட்டுள்ளனர்.

ஜூலை

ஜூலை

ஜூலை, நவம்பர் அல்லது டிசம்பர் என இந்த மூன்று மாதத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் லூலியாவை மணக்குமாறு சல்மானுக்கு அவரது குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அப்பாடா, ஒரு வழியாக சல்மானுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்ப்போம், சல்லு திருமண தேதியை கூறுவாரா, இல்லையா என.

English summary
Salman Khan's family members have given him a deadline to marry his girlfriend Lulia Vantur.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil