»   »  இலியானாவுக்கு சிபாரிசு செய்கிறாரா சல்மான் கான்?

இலியானாவுக்கு சிபாரிசு செய்கிறாரா சல்மான் கான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கிருந்து பாலிவுட்டுக்கு போன அசின் அங்கு படங்கள் நடித்து பிரபலம் ஆனதை விட சல்லு பாயுடன் வந்த கிசுகிசுக்களாலேயே பிரபலம் ஆனார். தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருக்கிறார் என்பது வரை பாலிவுட் மீடியாக்கள் எழுதின. பின்னர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய மைக்ரோமேக்ஸ் ஓனரை கல்யாணம் செய்து செட்டில் ஆனார்.

Salman recommends for Ileana?

இப்போது அசின் இடத்தை இலியானா பிடித்துவிட்டார் என்று கிசுகிசுக்கள் ஓடுகின்றன. இலியானா இப்போதுதான் அக்‌ஷய் குமாருடன் ருஸ்தம் படத்தில் நடித்தார். அவர் அடுத்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படம் ஜுட்வா 2. சல்மான் நடித்து ஹிட் ஆன ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. முதல் பாகத்தில் சல்மான் கான் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.

Salman recommends for Ileana?

இந்த ஜுட்வா 2 வில் சல்மான் நடிக்கவில்லை. பதிலாக வருண் தவான் நடிக்க டேவிட் தவான் இயக்குகிறார். இதில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர்கள் ப்ரிணிதி சோப்ராவும், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும். சல்மான் கானின் சிபாரிசால் ஜாக்குலினை தூக்கிவிட்டு இலியானாவை கமிட் செய்துவிட்டார்களாம்.

இது போதாதா கிசுகிசுக்கள் றெக்கை கட்ட? சல்லு பாய்க்கு சவுத் இண்டியன் பொண்ணுகன்னா இஷ்டமோ?

English summary
Bollywood reports say that Salman Khan is recommending Ileana to get new chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil