Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜாக்குலினுக்கு 3 பெட்ரூம் வீடு பரிசளித்ததை மறுக்கிறார் சல்மான்!
மும்பை: இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸுக்கு 3 பெட்ரூம் கொண்ட பிளாட் ஒன்றை வாங்கிப் பரிசளித்ததாக வெளியான தகவலை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மறுத்துள்ளார்.
சல்மான் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு திடீர் திடீர் என விலையுயர்ந்த பரிசுகள் கொடுத்து அசத்துவது வழக்கம். அந்தவகையில், தன்னுடன் கிக் படத்தில் ஜோடியாக நடித்த ஜாக்குலினுக்கு பிளாட் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார் சல்மான் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.
தற்போது அத்தகவலை பொய் என மறுத்துள்ளார் சல்மான்.
கிக்...
நடிகர் சல்மான் கான் கடந்த 2009ம் ஆண்டு தெலுங்கில் ஹிட்டான கிக் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்தியிலும் கிக் என்றே பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் ரம்ஜான் பண்டிகையின்போது ரிலீஸாக உள்ளது.
கிசுகிசு...
பொதுவாக சல்மானுடன் ஜோடி சேரும் நடிகைகளுடன் அவருக்கு காதல் உண்டாகி விட்டதாக செய்தி வெளியாவது வழக்கம். அதேபோல், கிக் படத்தில் நடித்த போது, ஜாக்குலினுக்கும் சல்மான் கானுக்கும் இடையே காதல் உண்டானதாக ஊடகங்களில் கிசுகிசு வெளியானது.
காதல் பரிசு...
இதற்கிடையே மும்பை பந்த்ரா பகுதியில் 3 படுக்கையறைக் கொண்ட பிளாட் ஒன்றில் சமீபத்தில் குடியேறினார் ஜாக்குலின். அந்த பிளாட் சல்மான் ஜாக்குலினுக்கு காதல் பரிசாக அளித்தது என கடந்த வாரம் செய்தி வெளியானது.
அசினுக்கு பரிசு...
ஏனெனில், முன்னர் ரெடி படத்தில் தன்னுடன் நடித்த அசினுக்கு ஒரு பிளாட்டை சல்மான் கான் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜாக்குலினுக்கும் சல்மான் பிளாட் வாங்கித் தந்துள்ளதாக கூறப்பட்டது.
மறுப்பு...
ஆனால், கிக் படத்தின் புரோமோஷனல் விழாவில் கலந்து கொண்ட சல்மான் தற்போது ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தியை மறுத்துள்ளார்.
சிங்கிள் பெட்ரூம் வீடு...
மேலும், தானே ஒரு படுக்கையறை உள்ள வீட்டில் வசித்து வரும் நிலையில் நான் ஏன் ஜாக்குலினுக்கு 3 படுக்கையறை கொண்ட வீட்டை பரிசளிக்க வேண்டும் என சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார் சல்மான்.