மீண்டும் இப்தார் விருந்தில் கட்டித் தழுவிக் கொண்ட ஷாருக் - சல்மான்!
மும்பை: கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் பாபா சித்திக்கி அளித்த இப்தார் விருந்தில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் கட்டிப்பிடித்துக் கொண்ட காட்சியை பலரும் கை தட்டி வரவேற்று ரசித்தனர்.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் பிறந்த நாள் விழாவின் போது நடிகர்கள் ஷாருக்கான்-சல்மான் கான் இடையே சண்டையும் சச்சரவும் ஏற்பட்டது.
இதனையடுத்து, இருவர் மத்தியிலும் பகைமை நீடித்து வந்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கி சூசகமாக பேசுவதை இரு கான்களும் வாடிக்கையாக வைத்திருந்தனர். இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை, சந்தித்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் தவிர்த்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மும்பையில் நடந்த மகாராஷ்டிர எம்.எல்.ஏ பாபா சித்திக்கியின் இப்தார் விருந்தின்போது இருவரும் நேரில் சந்தித்து கட்டிப்பிடித்த நிகழ்வு கலகலப்பை ஏற்படுத்தியது. இந்த வருடமும் அது நடந்தேறியுள்ளது.

இப்தார் விருந்து...
மும்பை தாஜ் லேன்ட்ஸ் என்ட் ஹோட்டலில் நேற்று மாலை இப்தார் விருந்துக்கு பாபா ஏற்பாடு செய்திருந்தார்.

முதலில் வந்த ஷாரூக்...
இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான் அழைக்கப்பட்டிரு்நதார். அவர் முதலில் வந்தார். அவர் வந்த 20 நிமிடம் கழித்து சல்மான் வந்தார்.

அறிமுகம்...
சல்மான் கானை விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பாபா சித்திக்கி. அப்போது ஷாருக்கிடமும் வந்தார். ஷாருக்கைப் பார்த்த சல்மான் அவருக்குக் கை குலுக்கினார்.

கட்டிப் பிடித்தனர்...
பதிலுக்கு ஷாருக், சல்மானை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சில விநாடிகள் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

பிரபலங்கள்...
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், சலீம் கான், சொஹைல் கான், சுனில் ஷெட்டி, ஆதித்யா பாஞ்சோலி என திரையுலகினரும் திரளாக வந்திருந்தனர்.

கடந்தாண்டு இப்தார் நிகழ்ச்சியில்...
கடந்த ஆண்டும் பாபா வைத்த இப்தார் விருந்துக்கு ஷாருக், சல்மான் வந்திருந்தனர். இருவரும் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.

ஸ்டார் கில்ட் விருது விழா....
அதேபோல கடந்த ஜனவரி மாதம் மும்பையில் நடந்த ஸ்டார் கில்ட் விருது விழாவிலும் இருவரும் கலந்து கொண்டனர். அப்போதும் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

இது 3வது முறை...
தற்போது 3வது முறையாக கட்டிப்பிடித்து சகஜமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











