»   »  சமந்தா தோழியின் கை பட்டு ஜொலிக்கப் போகும் விஜய்!

சமந்தா தோழியின் கை பட்டு ஜொலிக்கப் போகும் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படத்தின் ஆடை வடிவமைப்பாளராக சமந்தாவின் தோழி நீரஜா கோனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் விஜய் 61. தெறி படத்தை அடுத்து அட்லீ, விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

Samantha's buddy to style Vijay

படப்பிடிப்பு நேற்று துவங்கியது. தெறி படம் போன்று இதுவும் ஹிட்டாகும் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய 3 ஹீரோயின்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமந்தாவின் நெருங்கிய தோழியான நீரஜா கோனா படத்தின் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை நீரஜா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

நீரஜாவின் ட்வீட்,

விஜய் சாரை ஸ்டைலாக்கிறேன் மற்றும் அட்லீ சாருடன் பணியாற்றுகிறேன். ரசிகை தருணம் ❤️️#Vijay61 #Thenandal100 @ThenandalFilms என தெரிவித்துள்ளர்.

English summary
Samantha's friend Neeraja Kona is set to style Vijay in his upcoming movie Vijay 61 being directed by Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil