விஜய்யை அப்போ கழுவி ஊத்துனாரு.. சமுத்திரகனி இப்போ என்ன சொல்லிருக்காரு பாருங்க

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்பதற்கு நெருங்கி வந்துவிட்டார் விஜய். அந்தக் கட்சிக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. விசிகவும் இன்று ஆதரவை தெரிவித்துவிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி செய்தியாளர்களிடம் விஜய் வெற்றி குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏற்கனவே திரிஷா விஷயத்தில் விஜய்யை கழுவி ஊற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக மொத்தம் 108 தொகுதிகளை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லையென்பதால்; மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. காங்கிரஸ் முதல் ஆளாக சென்று ஆதரவு கொடுத்தது. அதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் அடுத்தடுத்து ஆதரவை தெரிவித்தன. இருப்பினும் இன்னும் இரண்டு எம்.எல்.ஏஎக்களின் ஆதரவு தேவை என்ற நிலை இருக்கிறது.

Samuthirakani Praises Vijay After Earlier Criticism Over Trisha Krishnan Controversy
Photo Credit:

விசிக கொடுக்கும் ஆதரவு?: அந்த ஆதரவை தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கும் என்று தெரிகிறது. இக்கட்சியின் ஆதரவுதான் கடந்த சில நாட்களாகவே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மு.க.ஸ்டாலினுடன் ஒரு ஆலோசனை, தன் கட்சி நிர்வாகிகளுடன் ஒரு ஆலோசனையை செய்துவிட்டு தனது ஆதரவை கொடுக்கவிருக்கிறார். விஜய்யும், திருமாவளவனை நேரில் சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இன்றைக்குள் விசிகவின் ஆதரவு கிடைத்துவிடும். எனவே விரைவில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்கவிருக்கிறார்.

Also Read
அரசியலுக்கு வர என்ன தகுதி வேணும்? சாராயம் காச்சியிருக்கணுமா? விஜயை ஏன் பாடாப்படுத்துறீங்க.. நடிகர்
அரசியலுக்கு வர என்ன தகுதி வேணும்? சாராயம் காச்சியிருக்கணுமா? விஜயை ஏன் பாடாப்படுத்துறீங்க.. நடிகர்

பாராட்டும் சமுத்திரகனி: இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக திரிஷா விஷயத்தில் விஜய்யை கழுவி கழுவி ஊற்றிய சமுத்திரகனி இப்போது விஜய்யை பாராட்டியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பல தடைகளை தாண்டி இப்போது ஆட்சியமைக்க இருக்கும் என் அன்பு சகோதரர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நாளுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது

நிறைய தடைகள் வரும்: சகோதரா இன்னும் நிறைய தடைகள் வரும். அதையெல்லாம் நீங்கள் உடைக்க வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். பெரிதாக வெல்ல வேண்டும். வெல்வோம்" என்றார். முன்னதாக சங்கீதா விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று குற்றஞ்சாட்டி நீதிமன்றத்துக்கு சென்றார். அவர் அப்படி செய்த சில நாட்களிலேயே திரிஷாவும், விஜய்யும் ஒரே உடை அணிந்து திருமணம் ஒன்றுக்கு வந்திருந்தார்கள். அதை பார்த்து சமுத்திரகனியும் ரொம்பவே கொதித்துவிட்டார்.

ஆதங்கத்தில் பேசிய கனி: அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாலா,ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோரிடம் விஜய் குறித்து பேசிய சமுத்திரகனி, "என்ன நினைத்து இப்படி செய்தாய். எதுவாக இருந்தாலும் நாலு சுவற்றுக்குள் வைத்துக்கொள். இப்போதான் எல்லாம் நல்லா வந்துகொண்டு இருந்தது. கட்சியில் இருப்பவர்களே இதற்கெல்லம் எங்களால் முட்டு கொடுக்க முடியாது என புலம்புகிறார்கள்" என்றார். அந்த வீடியோ பெரிய அளவில் ட்ரெண்டானது. அதனையடுத்து இதுகுறித்து விளக்கமளித்த கனி, 'ஆம் அப்படி பேசினேன்தான். அவர் மீது எனக்கு அக்கறை இருக்கிறது. அதன் ஆதங்கம்தான் அது" என்று குறிப்பிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X