தாயோட மார அறுத்துட்டு எப்படி சாப்பிட முடியும்.. பீனிக்ஸ் போல வருவாரு சூர்யா.. சமுத்திரகனி எமோஷனல்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு குவிந்த எதிர்மறையான விமர்சனங்கள் தன்னை ரொம்பவே பாதித்ததாகவும் அந்த மனுஷனை அது எந்தளவுக்கு பாதித்திருக்கும் என திரு. மாணிக்கம் படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமுத்திரகனி எமோஷனலாகி விட்டார்.
தாயோட மார அறுத்துட்டு எப்படி சாப்பிட முடியும் என்றே சமுத்திரகனி சூர்யாவை கடுமையாக விமர்சித்தவர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரு. மாணிக்கம் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

தனக்கு சினிமாவில் நேர்ந்த அவமானங்கள் குறித்து முன்னதாக சமுத்திரகனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய நிலையில், தற்போது கங்குவா படத்துக்கு குவிந்த நெகட்டிவ் விமர்சங்கள் பற்றி புரமோஷன் பேட்டியில் பேசியுள்ளார்.
கலங்கி நிற்கும் சூர்யா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புஷ்பா 2 படம் 1500 கோடி வசூலை நெருங்கிய நிலையில், அந்தளவுக்கு சூர்யா படம் வசூல் செய்யும் என படக்குழுவினரும் நம்பினர். ஆனால், படம் வெளியான பின்னர் படத்தை பார்த்த விமர்சகர்களும் ரசிகர்களும் படத்தை கழுவி ஊற்றி தோல்வியடைய செய்துவிட்டனர். சூர்யாவுக்கு எதிராக திட்டம்போட்டு சதி நடக்கிறது என்றும் விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் யூடியூப் சேனல்களை தியேட்டர் வளாகத்திற்குள்ளே அனுமதிக்க கூடாது என்றும் ஏகப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. சூர்யா கலக்கத்தோடு ஒரு பக்கம் கோயில்களுக்கு சென்றதும், நடிகை ஜோதிகா ஒரு பக்கம் கோயில்களுக்குச் சென்று வழிபட்ட காட்சிகளும் சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி சமுத்திரகனி போன்ற சில நல்ல சினிமாக்காரர்களின் உள்ளங்களையும் கலங்கடித்துள்ளது.
தாயின் மார அறுத்துட்டு: குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவதே தாய் தான். அந்த தாயோட மார அறுத்துட்டு எப்படி சாப்பிட முடியும். சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் பலரும் கங்குவா படத்தையும் சூர்யாவையும் கடுமையாக விமர்சித்து அந்த பணத்தில் எப்படித்தான் சாப்பிடுகின்றனரோ என தெரியவில்லை என சமுத்திரகனி பொங்கிவிட்டார்.
பீனிக்ஸ் போல வருவான்: என் தம்பி சூர்யா லேசு பட்ட ஆள் இல்லை, நிச்சயம் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவான். அவன் செய்த நன்மைகள், அறத்தோடு வாழும் வாழ்க்கை, எத்தனை பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கிறான். அதையெல்லாம் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் எப்படித்தான் மோசமாக பேசத் தோன்றுகிறதோ என தனது படத்தின் புரமோஷனுக்காக வந்ததையே மறந்துவிட்டு புலம்பித் தள்ளிவிட்டார் சமுத்திரகனி.
பாலாவுக்காக சென்ற சூர்யா: பாலா இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் வணங்கான் படத்தை முதலில் சூர்யா தான் தயாரித்து நடித்து வந்தார். ஆனால், சில காரணங்களுக்காக சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் அருண் விஜய்யை வைத்து பாலா வணங்கான் படத்தை எடுத்து முடித்து நேற்று ஆடியோ லாஞ்ச் நடத்தினார். அந்த விழாவில் சிவகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். வணங்கான் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் பாலாவுக்காக சூர்யா வந்ததை பார்த்த ரசிகர்கள் அந்த மனசு தான் சார் கடவுள் என வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











