twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெற்றோர்கள் நினைத்தால்... சுவாதி, வினுப்ரியா மரணங்கள் இனி நிகழாது! - சமுத்திரக்கனி

    By Shankar
    |

    சேலம்: சுவாதி, வினுப்ரியா மரணங்கள் போல இனி எங்கும் நடக்கக் கூடாது. அது பெற்றோர் கையில் உள்ளது. அவர்கள் நினைத்தால் குழந்தைகளை நல்லவர்களாக மாற்ற முடியும் என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறினார்.

    சமுத்திரக்கனி தயாரித்து இயக்கிய படம் அப்பா. தமிழகம் முழுவதும் சமீபத்தில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்துக்கு பாராட்டுகளும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

    இந்தப் படத்தின் வெளியீட்டையொட்டி படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்களுடன் நடிகர் சமுத்திரக்கனி ஒவ்வொரு மாவட்டமாக அப்பா படம் ஓடும் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார்.

    நேற்று சமுத்திரக்கனி மற்றும் அப்பா குழுவினர் சேலம் வந்திருந்தனர். இதையடுத்து சேலத்தில் 2 தியேட்டர்களில் அப்பா படத்தைக் காண வந்த ரசிகர்கள் மத்தியில் அவர் பேசினார்.

    அப்பா தலைப்பு தப்பா?

    அப்பா தலைப்பு தப்பா?

    பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், "அப்பா படத்தை நான் ஆரம்பித்த போதே சிலர் இந்த படத்தின் தலைப்பு தவறு என்று சொன்னார்கள். ஆனால் உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் அப்பா உண்டு. முழுக்க முழுக்க ரசிகர்களை நம்பியே அப்பா திரைப்படத்தை தயாரித்து திரையிட்டுள்ளேன். நல்ல விஷயங்களை தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரிப்பார்கள். அதேபோன்று இந்த படத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நான் எதிர்பார்த்ததை விட அப்பா திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. நன்றாக ஓடிக் கொண்டுள்ளது.

    சாதி மதம் கடந்து...

    சாதி மதம் கடந்து...

    ஒரு குழந்தையை 15 வயது வரைக்கும் தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுத்திருக்கிறேன். 15 வயது வரைக்கும் தங்களது குழந்தைகளுக்கு என்ன விதைக்கிறமோ? அது தான் மரமாக வளரும். ஜாதி, மதம், இனம் ஆகிய மூன்றையும் கடந்து நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளை அவர்களது இடத்திற்கு சென்று பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

    சுவாதி - வினுப்ரியா

    சுவாதி - வினுப்ரியா

    சுவாதி, வினுப்பிரியா போன்ற மரணங்கள் இனிமேல் தமிழகத்தில் நடக்கக்கூடாது. நன்றாக படிக்கிறவர்கள்தான் தவறான முடிவை எடுத்து இறந்து போகிறார்கள். வாழ்கிறவர்கள் எதற்காக சாக வேண்டும்? உலகத்திலே இந்தியாவில் தான் அதிக தற்கொலை நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் தற்கொலையில் தமிழகம் முதலிடமும், தமிழகத்தில் வேலூர் மாவட்டம் முதலிடத்திலும் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. என்னை பொறுத்தவரையில் பெற்றோர்கள் நினைத்தால் குழந்தைகளை நல்லவர்களாக மாற்ற முடியும்.

    2 நாட்கள் கழித்து வந்த திருட்டு டிவிடி

    2 நாட்கள் கழித்து வந்த திருட்டு டிவிடி

    பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும் முன்பே திருட்டு டிவிடிக்கள் மூலம் வெளி உலகிற்கு வந்துவிடும். எனது படம் வெளியான 2 நாட்கள் கழித்து திருட்டு வீடியோவாக வந்துவிட்டது.

    தனி மனித வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியும்.

    விருது கிடைத்தாலும்...

    விருது கிடைத்தாலும்...

    சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட எனது அப்பா திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நான் எடுக்கவில்லை. கொடுத்தால் மகிழ்ச்சி. கொடுக்காவிட்டாலும் மகிழ்ச்சி.

    மற்ற மொழிகளில்

    மற்ற மொழிகளில்

    100 சதவீதம் குழந்தைகளை புரிந்த பிறகே இந்த படத்தை தயாரித்து நடித்துள்ளேன். அப்பா திரைப்படம் வெற்றி பெற்றால் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடுவேன். அடுத்த படம் எந்த மாதிரி இருக்கும் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது," என்றார்.

    English summary
    In a audience meet during Appa Show in Selam, Director Samuthirakkan urged that the parents should take care of Children up to their age of 15.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X