தனுஷிடம் ஆசை நிறைவேறிவிட்டது.. ரஜினியிடம் அதை சொன்னபோது.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: இந்திய அளவில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர் தனுஷ். இதுவரை இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இவருக்கும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில வருடங்களுக்கு முன்பு சட்டப்பூர்வமாக அவர்கள் பிரிந்துவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க பிரபல நடன அமைப்பாளரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் சில ரஜினி மற்றும் தனுஷ் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும்போது தனுஷை கிண்டல் செய்யாதவர்களே இல்லை. ஆனால் அவர் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் தனது வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். அதன் காரணமாக அடுத்தடுத்து வெற்றி பெற்று தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இது ஒருபக்கம் இருக்க ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் இடையே காதல் மலர்ந்தது. வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து உடனடியாக அவர்கள் திருமணமும் செய்துகொண்டார்கள்.

Sandy Master Opens Up About Working With Dhanush Rajinikanth and Kamal Haasan
Photo Credit:

பிரிந்த ஜோடி: திருமணமாகி பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் பெரிதாகி பிரிவது என முடிவெடுத்தார்கள். அதனையடுத்து இரண்டு தரப்புமே பேசி டீசன்ட்டாக பிரிந்துவிட்டார்கள். சில வருடங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது. தங்களது பிள்ளைகளை கோ பேரண்ட்டிங் மூலம் வளர்த்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த முதல்வன் அர்ஜுன்.. ரொம்ப உருகிருக்காரே ப்பா!
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த முதல்வன் அர்ஜுன்.. ரொம்ப உருகிருக்காரே ப்பா!

சாண்டி மாஸ்டர் பேட்டி: சூழல் இப்படி இருக்க பிரபல நடன அமைப்பாளரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் கொடுத்த பேட்டியில், "பெரிய நட்சத்திரங்களோடு வேலை செய்யும்போது எப்போதுமே எனக்கு சில ஆசைகள் இருக்கும். சமீபத்தில்கூட தனுஷுடன் ஒரு பாடலில் வேலை செய்தேன். அவரை முழுக்க முழுக்க டான்ஸ் ஆட வைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

ரஜினி பற்றி: அதேபோல் ரஜினியுடன் சிக்கிட்டு பாடலில் வேலை செய்தேன். அந்தப் பாடலில் வரும் ஃப்ளோர் மூவ்மென்ட்டை அவர் செய்வாரா என்ற சின்ன சந்தேகம் எனக்கு இருந்தது. அதை அவரிடம் கேட்கலாம் என்று சென்றேன். அந்த நேரம் பார்த்து அவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி அந்த ஐடியாவை சொன்னேன். உடனே அவர், 'ஆஹா.. என்ன செய்ய வேண்டும், என்ன பண்ண வேண்டும்' என சொல்லி அதனையும் செய்துவிட்டார். கமல் இதுவரை சிங்காரி சரக்கு மாதிரி பல லோக்கல் பாடல்களை செய்திருக்கிறார். அவருடனும் அப்படி ஒரு பாடலை செய்ய வேண்டும் என நினைத்தேன். பத்தல பத்தல பாடலின் பாதி போர்ஷன் எடிட்டில் போய்விட்டது. அது மட்டும் வந்திருந்தால் இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X