உன்னை அமுக்குகிறார்களா?.. எதுவானாலும் சொல்.. நான் இருக்கேன்.. சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் சொன்ன நடிகை
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது டாப் நடிகர்களில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இப்போது அவர் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார் எஸ்கே. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகை சங்கீதா சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அதற்கு பிறகு வெள்ளித்திரையில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். அதன் பலனாக தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக அவரை நிலைநிறுத்திக்கொண்டார். அதேபோல் சிவாவை நம்பி பணம் போட்டால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருக்கிறது.

சாய்த்த சிவகார்த்திகேயன்: இடையில் அவர் பிரின்ஸ் உள்ளிட்ட படங்களில் சறுக்கினார். எனவே அவரது வளர்ச்சி அவ்வளவுதான் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அடுத்ததாக அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து பேசியவர்களை சாய்த்தன. முக்கியமாக கேப்டன் மில்லரோடு போட்டியாக களமிறங்கிய அயலான் திரைப்படம் மில்லரை விடவும் அதிக வசூல் செய்து கெத்து காண்பித்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியும், எஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.
ஆரம்பித்த பஞ்சாயத்து: இது ஒருபக்கம் இருக்க கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் தனுஷை தாக்கி பேசிவிட்டார் என்று பஞ்சாயத்து கிளம்பியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதுபோல் சில நாட்களுக்கு முன்பு இருவரும் சந்தித்துக்கொண்டனர். அந்தப் புகைப்படமும் ட்ரெண்டானது. இதற்கிடையே சிவகார்த்திகேயனை சினிமாவில் வளரவே விட மாட்டேன் என்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறிவருவதும் கவனிக்கத்தக்கது.
சங்கீதா பேட்டி: இந்நிலையில் நடிகை சங்கீதா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து பேசுகையில், "எனக்கு சிவகார்த்திகேயன் ரொம்பவே பயப்படுவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் அவரும் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருந்தேன். ஒருமுறை அவர் ஆடியதில் எனக்கு முரண் இருந்தது. அதை அவரிடம் சொன்னபோது, நான் ஒரு காமெடியன் எனக்கு அவ்வளவுதான் வரும் என்று கோபப்பட்டார்.
எனக்கும் கோபம்: உடனே நானும் டென்ஷன் ஆகிவிட்டேன். ஆனாலும் அவரிடம் நான், சிவா உங்கள் உடம்பில் டான்ஸுக்கான ரிதம் இருக்கிறது. நீங்கள் அதை ஒழுங்காக கற்றுக்கொண்டால் நன்றாக ஆடுவீர்கள் என்று சொன்னேன். இதை ஒரு வாய்ப்பாக பாருங்கள். ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் நடனத்தை தொடர்ந்து கற்றுக்கொண்டார். இப்போது அவர் டான்ஸ் ஆடுவதை பார்க்கையில் அவரை நல்வழிப்படுத்தியிருக்கிறோம் என்று சந்தோஷமாக இருக்கிறது.
உன்னை அமுக்குகிறார்களா?: சிவாவுடன் நான் ஆரம்பத்தில் ரொம்பவே நெருக்கமாக இருந்தேன். அவர் கஷ்டகாலத்தில் இருந்தபோது அவருக்கு ஃபோன் செய்து உன்னை நிறைய பேர் போட்டு அமுக்குவதாக கேள்விப்பட்டேன். என்ன கஷ்டமாக இருந்தாலும் சொல் பார்த்துக்கொள்ளலாம். நான் இருக்கிறேன் என்று சொல்வேன். இன்று அவர் மிகப்பெரிய ஆளாகிவிட்டார். அதனால் அவருக்கு அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அவருக்கு அது தேவையும்படாது. வேண்டுமானால் அவர் அறிவுரை கூறினால் நான் கேட்டுக்கொள்ளலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











