முடிந்தவரை குடும்பத்துடன் கும்மாளமிட திட்டமிட்டுள்ள சஞ்சய் தத்
மும்பை: நான்கு வார கால அவகாசத்தின் மூலம் சற்று ரிலாக்ஸ் ஆகி இருக்கும் சஞ்சய் தன் நேரம் முழுவதையுமே குடும்பத்துடன் செலவழிக்க ஆசைப் படுகிறாராம். அதற்காக தனது டப்பிங் வேலைகளையும் வீட்டில் இருந்தபடியே செய்கிறாராம்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர், உயிரிழந்தனர். இந்த வழக்கில், சட்ட விரோதமாக, ஆயுதங்கள் வைத்திருந்ததாக, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனையை, ஐந்தாண்டு தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட், கடந்த மார்ச் 21-ம் தேதி உத்தரவிட்டது. ஏப்ரல் 18ம் தேதிக்குள் , கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என, சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஏப்ரல் 17 விசாரணைக்கு வந்த, மனுவை விசாரித்த நீதிபதிகள் மனிதாபிமான அடிப்படையில் சஞ்சய் தத்திற்கு மேலும் 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குழந்தைகளுக்காக...
தன் குழந்தைகளுடன் அதிகளவு நேரத்தை செலவிடவே அவர் இப்படியான மாற்று ஏற்பாடுகளில் இறங்கி இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அறையே டப்பிங் தியேட்டரானது...
தனது வீட்டின் ஒரு அறையை இதற்கென பிரத்யேகமாக மாற்றி அமைத்துள்ளாராம் சஞ்சய்.

போலீஸ்கிரி...
டி.பி. அகர்வாலின் போலீஸ்கிரி படத்துக்கான டப்பிங்கை இன்று முதல் பேச இருக்கிறார். இதுகுறித்து அகர்வால் கூறும்பொழுது, ‘படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளது. விரைவில் அதுவும் படமாக்கப்படும்' என தெரிவித்தார்.

சாங்கீர் ரீமேக்...
சாங்கீர் ரீமேக்கில் பிரியங்காவுடனான காட்சி படமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்ய...
கோர்ட் அளித்துள்ள 30 நாள் அவகாசத்தில் ஏறக்குறைய 25நாட்கள் அவரது பட வேலைகளை முடிப்பதற்கே சரியாக இருக்கும் போல.


Click it and Unblock the Notifications











