twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘கண்மணி அன்போடு’... சிறைக்குள் கவிஞராக மாறிய சஞ்சய் தத்... விரைவில் புத்தகமாக ரிலீஸ்!

    |

    மும்பை: சிறைக்குள் இருந்த காலத்தில் 500 கவிதைகள் எழுதியுள்ளாராம் சஞ்சய் தத். விரைவில் அவற்றைத் தொகுத்து புத்தகமாக அவர் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

    மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கடந்தவாரம் ரிலீசானார். நன்னடத்தைக் காரணமாக தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே அவர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார்.

    பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்த சஞ்சய் தத், சிறைக்குள் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார். இடையில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் கவிதைகளும் எழுதி வந்துள்ளார்.

    500 கவிதைகள்...

    500 கவிதைகள்...

    சிறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள், பழக்கமான மனிதர்கள் இவர்களை வைத்து கவிதைகள் இயற்றியுள்ளாராம் சஞ்சய் தத். கிட்டத்தட்ட 500 கவிதைகள் அவர் சிறைக்குள் எழுதி இருக்கிறார்.

    சிறை அனுபவம்...

    சிறை அனுபவம்...

    விரைவில் அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட சஞ்சய் தத் திட்டமிட்டுள்ளார். இதில் அவரது சிறை அனுபவமும் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

    புதிய பட வாய்ப்புகள்...

    புதிய பட வாய்ப்புகள்...

    உடனடியாக இந்தப் பணிகளை ஆரம்பிக்காமல் சிறிது காலம் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளார் சஞ்சய் தத். இதற்கிடையே புதிய பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வருகின்றன.

    ஓய்வு நேரத்தில்...

    ஓய்வு நேரத்தில்...

    இதனால் தனது ஓய்வு நேரங்களில் புத்தகம் எழுதுவதற்கான பணிகளை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய கவிஞர்...

    புதிய கவிஞர்...

    எத்தனையோ தலைவர்களை, கவிஞர்களை, எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமைக்கு உரியது சிறைச்சாலைகள். தற்போது அந்தப் பட்டியலில் சஞ்சய் தத்தும் சேர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sanjay Dutt has penned down as many as 500 poems while he was in prison, reports a leading daily.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X