மனைவிக்கு கல்லீரலில் கட்டி... மீண்டும் 30 நாள் பரோலில் சஞ்சய்தத்
மும்பை: மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் கூறி மீண்டும் 30 நாட்கள் பரோலுக்கு அனுமதி பெற்றுள்ளார் சஞ்சய்தத்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி புனே எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் நடிகர் சஞ்சய்தத். கடந்த அக்டோபர் மாதம் தனக்கு மருத்துவப் பரிசோதனை எனக் கூறி இரண்டு வாரங்கள் பரோலில் வந்திருந்தார் சஞ்சய்.
பரோல் முடிந்து மீண்டும் சிறை திரும்பிய அவர், தற்போது மீண்டும் மனைவி உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் பெற்றுள்ளார். ஆனால், உடல்நிலை சரியில்லாத மான்யதா விழா ஒன்றில் பங்கெடுத்தது போன்று வெளியான காட்சிகளால் சர்ச்சை உண்டாகியுள்ளது.

மீண்டும் பரோல்....
மனைவி மான்யதாவின் உடல்நலக்குறைவை காரணம் காட்டி மீண்டும் ஒரு மாதம் பரோலில் செல்ல சஞ்சய் தத் இப்போது அனுமதி பெற்றிருக்கிறார்.

சர்ச்சை...
ஆனால், சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா சினிமா விழா ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி அவரது உடல்நிலை தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு...
இதனால், பொய்க்காரணம் கூறி பரோலில் செல்ல அனுமதி பெற்றதாக சஞ்சய் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சஞ்சயின் பரோல் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

விளக்கம்....
இந்நிலையில், மான்யதா உண்மையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது டாக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த குளோபல் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜய் சாகுலே விளக்கம் அளித்துள்ளார்.

கல்லீரலில் கட்டி....
அதில் அவர் கூறியிருப்பதவது, ‘மான்யதாவின் கல்லீரலில் கட்டி இருக்கிறது. அவருக்கு நெஞ்சு வலி வருகிறது. கடந்த 15-20 நாட்களில் 10 கிலோ எடை குறைந்திருக்கிறார். அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். சோதனைகள் செய்தபிறகே, அறுவை சிகிச்சை செய்வதா வேண்டாமா என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியும். கடந்த வாரம் சிகிச்சைக்கு வந்தபோது சில மருந்துகளை எழுதி கொடுத்திருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











