மாதுரியுடன் கள்ளக்காதல், போதை, ஆயுதம்: நடிகர் சஞ்சய் தத்தின் சர்ச்சைகள்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சர்ச்சைகளின் செல்லப்பிள்ளை என்று கூறும் அளவுக்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.

பாலிவுட் நடிகர் சுனில் தத்தின் மகனான சஞ்சய் தத் பெரும்பாலும் சர்ச்சைகளுக்காக தான் அறியப்படுகிறார்.
அவர் சிக்கிய சர்ச்சைகள் பற்றி பார்ப்போம்.

போதை

போதை

சஞ்சய் தத் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும்போதே போதைப் பொருள் பயன்படுத்தத் துவங்கிவிட்டார். அவரது முதல் படம் 1981ம் ஆண்டு ரிலீஸான பிறகு அதிகமாக போதைப் பொருளை எடுக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்று போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளியே வர சிகிச்சை பெற்றார்.

மாதுரி

மாதுரி

பாலிவுட்டின் வெற்றி நாயகியான மாதுரி தீட்சித்துக்கும், திருமணமான சஞ்சய் தத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக பேச்சாகக் கிடந்தது. சஞ்சயின் மனைவி ரிச்சா அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்தபோது மாதுரி தான் தத்துக்கு ஆறுதல் கூறி வந்தாராம்.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தாதாக்கள்

தாதாக்கள்

மும்பை நிழல்உலக தாதா சோட்டா ஷகீலுடன் சஞ்சய் தத் பண விவகாரம் பற்றி பேசிய டேப் லீக்காகி 2001ம் ஆண்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மான்யதா

மான்யதா

தனது இரண்டாவது மனைவியான ரியா பிள்ளையை பிரிந்த பிறகு சஞ்சய் மான்யதாவை திருமணம் செய்தார். மான்யதா திருமணத்திற்கு முன்பே சஞ்சயின் குழந்தையை சுமந்ததாக கூறப்பட்டது. மேலும் சஞ்சய் தத்தை திருமணம் செய்தபோது மான்யதா வேறு ஒருவரின் மனைவி என்றும் செய்திகள் வெளியாகின.

அமீஷா

அமீஷா

திருமண இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அமீஷா பட்டேல் முன்னழகில் பெரும்பகுதி தெரியுமாறு உடை அணிந்து வந்தார். இதை பார்த்த சஞ்சய் தத் அவரை முன்னழகை ஆடையை வைத்து மறைக்குமாறு கூற அமீஷா மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் ஒரு துப்பட்டாவை எடுத்து அமீஷாவுக்கு போர்த்திவிட்டார். இதனால் கடுப்பான அமீஷா சஞ்சய் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாகக் கூறினார்.

அதனால்தான் சர்ச்சைகளின் செல்லப்பிள்ளை சஞ்சய் தத்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X