சிம்பு படத்தில் காமெடி நடிகராக நடிக்க இத்தனை கோடி கேட்கிறாரா சந்தானம்?.. இப்போ மார்க்கெட் அப்படி!

சென்னை: சிம்புவின் அடுத்த படத்தில் காமெடி நடிகராக நடிக்க நடிகர் சந்தானம் மிகப்பெரிய தொகையை கேட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சிம்பு தான் சினிமாவில் சந்தனத்தை அறிமுகப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மன்மதன் படத்துக்கு முன்னாடியே காதல் அழிவதில்லை படத்திலிருந்து அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாக சந்தானம் நடித்துள்ளார்.

மன்மதன் படத்தில் நடித்த சந்தானம் நாளை ரீ ரிலீஸாக உள்ள தளபதி விஜய்யின் சச்சின், சத்யராஜின் இங்கிலீஷ்காரன், பரத்தின் பிப்ரவரி 14, எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே, ஜெயம் ரவியின் இதயத் திருடன், அஜித் குமாரின் கிரீடம், பில்லா, சிம்புவின் வல்லவன், சிலம்பாட்டம், வாலு, வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Santhanam asking huge salary to act as a comedian for Silambarasan movie

சந்தானம் மற்றும் சிம்புவின் காம்பினேஷன் எப்போதுமே ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நிலையில், மத கஜ ராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் பலரும் சந்தனத்தை காமெடி நடிகராக நடிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிம்பு படத்தில் அவர் காமெடியனாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹீரோவாக மாறிய சந்தானம்: விஜய் டிவியில் லொள்ளு சபாவில் நடித்து வந்த சந்தானம் மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான நிலையில், சிம்புவுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். நம்பர் ஒன் காமெடி நடிகராக மாறிய சந்தானம் ஒரு கட்டத்துக்கு மேல் இனிமேல் இப்படித்தான் என ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அவர் நடிப்பில் வெளியான படங்களில் தில்லுக்கு துட்டு வரிசை படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறி உள்ளன. டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வரும் மே 16ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது.

இத்தனை கோடி சம்பளமா?: பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அடுத்ததாக சிம்பு நடிக்க உள்ளார். அந்த படத்தில் சந்தானத்தை எப்படியாவது காமெடி நடிகராக கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த படத்தில் நடிக்க சந்தானம் அதிகபட்சமாக 12 கோடி வரை சம்பளம் கேட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

எகிறிய மார்க்கெட்: சந்தானம் ஹீரோவாக நடித்து வந்த படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், அவரது மார்க்கெட் சற்றே சரிவை சந்தித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், மீண்டும் சந்தானத்தின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாக கூறுகின்றனர். சிம்பு ஒரு படத்துக்கு 35 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில், சந்தானம் 12 கோடி ரூபாய் கேட்பதில் எந்த ஒரு தவறும் இல்லை என்கின்றனர். அறிமுகப்படுத்திய நடிகர் படத்தில் காமெடி நடிகராக நடிக்க இத்தனை கோடி சம்பளம் கேட்கலாமா என்கிற கேள்விகள் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன. சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றி வேண்டும் என்கிற நிலையில், சந்தானம் கேட்கும் தொகையை கொடுத்து கண்டிப்பாக அவரை புக் பண்ணி விடுவார்கள் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X