எலும்பும் தோலுமாக பார்க்க பாவமாக இருக்கும் சந்தானம்: ஏன் தெரியுமா?

By Siva

சென்னை: அண்மையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சந்தானத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நகைச்சுவை செய்து கோடிகளில் சம்பாதித்து ஹீரோக்களே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஜம்முன்னு வாழ்ந்தவர் சந்தானம். தற்போதும் ஜம்முன்னு தான் இருக்கிறார் ஆனால் ஹீரோவாக.

ஹீரோவான பிறகு இனி காமெடியனாக பிற ஹீரோக்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் சந்தானம். புதுமுகம் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள அக்யூஸ்ட் நம்பர் ஒன் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

மேலும் அவர் நடித்து திரைக்கு வராமல் தள்ளித் தள்ளிப் போன சர்வர் சுந்தரம் படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரிலீஸ்

ரிலீஸ்

புதுமுகம் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள அக்யூஸ்ட் நம்பர் ஒன் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. மேலும் அவர் நடித்து திரைக்கு வராமல் தள்ளித் தள்ளிப் போன சர்வர் சுந்தரம் படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சந்தானம்

சந்தானம்

சந்தானம் தனது ரசிகர் மன்ற தலைவர் நடத்தும் கால் டாக்சி சேவையின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் சந்தானம் எலும்பும், தோலுமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நல்லா இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே, உடம்புக்கு ஏதாவது சரியில்லையோ என்று நினைத்தனர். இந்நிலையில் அவரிடமே இது குறித்து கேட்கப்பட்டது.

 டகால்டி

டகால்டி

நான் நலமாக உள்ளேன். நான் நடிக்கும் டகால்டி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. வெயிட் போட வேண்டும் என்றால் மூன்று நேரமும் பிரியாண சாப்பிட்டால் போச்சு என்று தன் ஸ்டைலில் தெரிவித்தார் சந்தானம். டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்கள் அது சர்கார் போஸ்டர் போன்று இருப்பதாக விமர்சித்தார்கள். ஒரே நாளில் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு டகால்டி என்கிற தலைப்பு ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

 ராணா

ராணா

சந்தானத்தை போன்று நடிகர் ராணாவும் படத்திற்காக தனது உடல் எடையை ஒரேயடியாக குறைத்து எலும்புக்கூடு போன்று இருக்கிறார். ஒல்லிக்குச்சியாக இருக்கும் ராணா தாடி, மீசையுடன் பார்க்க பரிதாபமாக உள்ளார். சந்தானம், ராணா ஆகியோரை பார்த்தால் சாப்பிட்டு பல நாட்கள் ஆனவர்கள் போன்று தெரிகிறார்கள். அவர்களுக்கு நல்ல சாப்பாட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் போன்று உள்ளது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X