ஆர்யா என் வீட்டையே இடிச்சு தரைமட்டமாக்கிட்டான்.. மேடையில் சந்தானம் சொன்ன மேட்டர்.. என்ன ஆச்சு?

சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று சத்யம் தியேட்டரில் அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் பங்கேற்றார். ஆர்யா, சிம்பு மற்றும் சந்தானம் என மூவரும் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இறுதி வரை 3 பேரும் கலகலப்பாக பேசி கலாய்த்துக் கொண்டனர்.

நடிகர் சந்தானம் மேடையேறி பேசும் போது, தனது நண்பனான ஆர்யா தனது வீட்டையே இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டான் என்றும் தன்னுடைய அம்மா மற்றும் மனைவி இருவரும் அதை பார்த்து ஷாக் ஆகிவிட்டனர் என பேசியது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Santhanam opens up how Arya demolished his home at DD Next Level Pre release event

நண்பேன் டா என ஆன்ஸ்க்ரீனுக்கு மட்டும் சொல்லாமல் ரியல் நண்பனாக வலம் வரும் ஆர்யா சந்தானத்தை வைத்து இந்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்: லொள்ளு சபா இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ராகவா லாரன்ஸ் ஸ்டைலில் ஹாரர் காமெடியை கையில் எடுத்து சந்தானமும் வெற்றியை ருசித்தார். டிடி ரிட்டர்ன்ஸ் எனும் தலைப்பில் கடைசியாக வெளியான படத்தை ராம் பாலாவுக்கு பதிலாக பிரேம் ஆனந்த் இயக்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தையும் அவரே இயக்கியுள்ளார். சந்தானம், செல்வராகவன், கெளதம் மேனன், கீதிகா, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் மொட்டை ராஜேந்திரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் அடுத்த வாரம் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆர்யா தான் தயாரிப்பாளர்: நடிகர் ஆர்யா தனது நண்பன் சந்தானத்துக்காக இந்த படத்தை தயாரித்துள்ளார். ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' தயாரிப்பு நிறுவனம் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் சொகுசு கப்பலில் எல்லாம் ஷூட் செய்து உருவாக்கியுள்ளனர். நண்பனோட பணம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என விமர்சகர்களிடமும் கோரிக்கை வைத்த சந்தானம் இந்த படத்தில் யூடியூப் விமர்சகராகவே நடித்துள்ளார்.

Santhanam opens up how Arya demolished his home at DD Next Level Pre release event

வீட்டை இடிச்சு தரைமட்டமாக்கிட்டான்: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மேடையேறி பேசிய சந்தானம், "நான் ஒரு பழைய வீட்டை தன்னால் முடிந்த சக்திக்கு வாங்கி புதிதாக ரெனவேட் செய்யலாம் என பிளான் பண்ணி வச்சி இருந்தேன். அந்த வீட்டுக்கு வெள்ளிக்கிழமையானா என் அம்மாவும் மனைவியும் போய் விளக்கேத்திட்டு வருவாங்க. ஒரு நாள் ஆர்யாவை என்னோட அந்த வீட்டுக்கு கூட்டிட்டுப் போனேன். அவன் உடனே வீட்டை பார்த்துட்டு, என்ன மச்சான் வீடு உன் டேஸ்ட்டுக்கு நல்லாவே இல்லை. இதை இடிச்சிட்டு புதுசா கட்டிடலாம்னு சொன்னான்.

நான் ஷாக் ஆகிட்டேன்: அதெல்லாம் வேணாம்பா ராசா அதுக்கெல்லாம் நிறைய செலவாகும் இதையே பெயிண்ட் அடிச்சு யூஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். ஆனால், அவன் கேட்கவே இல்லை, ஒரு பிரெண்டுக்கு போன் போட்டு வீட்டை இடிச்சு தரைமட்டமாக்கிட்டான். இதை எங்க வீட்டுல சொல்லல. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை என் அம்மாவும், மனைவியும் விளக்கேத்த போனப்ப எங்க வீடுன்னு தேட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் அவங்களுக்கு நான் சொல்லி புரிய வச்சேன். இதை ஏன் நான் சொல்றேன்னா அந்தளவுக்கு நாங்க ஃபிரெண்ட்ஸ் என சந்தானம் பேசினார். சிறப்பு விருந்தினராக வந்த சிம்புவும் சந்தானத்தை பாராட்டிவிட்டு எஸ்டிஆர் 49 படத்தில் மீண்டும் இணைவது ரொம்ப ஹேப்பி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X