»   »  கனவு பலித்தது... முழு நேர ஹீரோவானார் சந்தானம்... அடுத்து செல்வராகவன் இயக்கத்தில்!

கனவு பலித்தது... முழு நேர ஹீரோவானார் சந்தானம்... அடுத்து செல்வராகவன் இயக்கத்தில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தில்லுக்குத் துட்டு சந்தானத்தை கோடம்பாக்கத்தின் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக்கிவிட்டது.

அடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகக் கருதப்படும் செல்வராகவனின் இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார் சந்தானம்.

Santhanam to play lead role in Selvaraghavan movie

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘இரண்டாம் உலகம்' சரியாகப் போகாத நிலையில், படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு, தன் மனைவியை இயக்க வைத்து ‘மாலை நேரத்து மயக்கம்' படத்தை வெளியிட்டார்.

அடுத்து சிம்புவை வைத்து ‘கான்' என்ற படத்தை தொடங்கினார். ஆனால் படம் திடீரென நின்று போனது.

இந்நிலையில், செல்வராகவன் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படுத்தில் முதன்முறையாக ஒரு காமெடி நடிகரை தனது ஹீரோவாக்கியிருக்கிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', ‘இனிமே இப்பிடித்தான்', ‘தில்லுக்குத் துட்டு' ஆகிய படங்கள் மூலம் முழுமையான ஹீரோவாக மாறியுள்ள சந்தானம்தான் இந்தப் படத்தின் நாயகன் என்று செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


English summary
Santhanam has turned as full fledged comedian and now he is playing lead role in Selvaraghavan movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil