twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதுக்குள்ள சக்சஸ் பார்ட்டியா... இதெல்லாம் ஓவரா இல்ல… சந்தானத்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை : நடிகர் சந்தானம் நடித்த டிக்கிலோனா நேரடியாக ஓ.டி.டியில் கடந்த 10ந் தேதி வெளியானது.

    இப்படத்தில் யோகிபாபு, ஹர்பஜன் சிங் , ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், அனகா, ஷிரின், ஷாரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    மிரள வைக்கும் ரெஜினாவின் சூர்ப்பனகை டிரைலர்...எப்படி இருக்கு ? மிரள வைக்கும் ரெஜினாவின் சூர்ப்பனகை டிரைலர்...எப்படி இருக்கு ?

    படம் வெளியாகி 3 நாட்களே ஆனநிலையில், டிக்கிலோனா படக்குழுவினர் கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டியை கொண்டாடினர்.

    மைமிங் காமெடி

    மைமிங் காமெடி

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லோள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த சந்தானம். டைமிங் காமெடியில் கலக்கி,சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்தார். சந்தானம் வரும் ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

    காமெடி நடிகராக இருந்த சந்தானம் முதல் முதலாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் வரும் டைமிங் காமெடியால் அனைவரையும் சிரிக்கவைத்தார். இதனால் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து, கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

    தில்லுக்கு துட்டு

    தில்லுக்கு துட்டு

    சந்தானம் தில்லுக்கு துட்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஒரு பேய் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும். இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து, தில்லுக்கு துட்டு 2 வெளியானது ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிஸ்கோத், டகால்டி, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

    ஜீ5 ஓடிடி தளத்தில்

    ஜீ5 ஓடிடி தளத்தில்

    சந்தானம் 3 கெட்டப்பில் நடிக்கும் டைம் டிராவல் நகைச்சுவை திரைப்படம் தான் டிக்கிலோனா. இந்த படம் செப்டம்பர் 10ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசானது. இந்த படத்தில் 3 விதமான கெட்டப்பில் சந்தானம் அசத்துகிறார். ஹாக்கி வீரர் ஆகும் கனவில் இருக்கும் சந்தானம், அனாகாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். இதனால், ஹாக்கி வீரர் கனவு நிராசையாகிறது.

    டைம் டிராவல் மெஷின்

    டைம் டிராவல் மெஷின்

    இதையடுத்து, ஈ.பியில் லைன் மேன் வேலை கிடைக்கிறது. காதலின்போது இனித்த வாழ்க்கை, திருமணத்திற்குப் பிறகு கசக்க துவங்குகிறது. இதனால், டைம் டிராவல் மெஷின் மூலம், 2020இல் தனக்கு நடந்த திருமணத்தை நிறுத்திவிட்டு வாழ்க்கையை சரி செய்ய கடந்த காலத்துக்குச் செல்கிறார். சந்தானம் திருமணத்தை நிறுத்தினாரா, இல்லையா? என்பதே டிக்கிலோனா படத்தின் கதையாகும். இத்திரைப்படம் ஆஹா ஓஹா என்று இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

    இதெல்லாம் ஓவரா இல்ல

    இதெல்லாம் ஓவரா இல்ல

    இந்நிலையில், டிக்கிலோனா படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி நடத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். படமே செப்டம்பர் 10ந் தேதி தான் ரிலிசாச்சு அதுக்குள்ள சக்சஸ் பார்ட்டியா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், சிலர், 100 நாட்களில் கொண்டாட வேண்டிய பார்ட்டியை இப்போ கொண்டாடுறீங்க இதுஎல்லாம் ரொம்ப ஓவர் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்த சக்சஸ் பார்ட்டியில் டிக்கிலோனா படம் போட்ட கேக் வெட்டப்பட்டது. இதில் சந்தானம், ஆனந்த்ராஜ் மற்றும் டிக்கிலோனா படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

    English summary
    Dikkiloona Crew cut the cake and celebrated the success party
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X