'உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர்அடிக்காம பாத்துக்கும்' - சந்தானம் பஞ்ச்

By Shankar

வாலிப ராஜா படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம் அதில் மனநல மருத்துவர் வேடம் ஏற்று கலக்கியுள்ளாராம். படத்தில் அவரது ஒன்லைன் பஞ்ச்கள் வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு உள்ளது.

சந்தானம் தான் 'வாலிப ராஜா'. பலரின் பிரச்சனைகளைப் புரிஞ்சுகிட்டு தீர்வு சொல்ற மனநல மருத்துவர். சினிமாக்காரங்க படத்தோட ஒன்லைன் கேட்கிற மாதிரி, டாக்டர் சந்தானம் தன் பேஷன்ட்ஸ்கிட்ட அவங்க பிரச்சனைகளின் ஒன்லைன் கேட்பார். பிடிச்சிருந்தா, ட்ரீட்மென்ட் கொடுப்பார்.

படத்தில் வரும் சேதுவின் 'டபுள் ட்ராக்' ஒன்லைன், சந்தானத்துக்கு ரொம்ப பிடிச்சுப்போகும். அவருக்கு உதவுவார். லோக்கல் காமெடியோட, புத்திசாலித்தனமான காமெடிகளையும் இதில் சந்தானம் பண்ணியிருக்காராம்.

ரெண்டு பொண்ணு...

ரெண்டு பொண்ணு...

படம் குறித்து இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத் கூறுகையில், "ஒரு துணி கடைக்கு போறீங்க... பச்சை கலர் சட்டையும் பிடிச்சுருக்கு. நீலக் கலர் சட்டையும் பிடிச்சுருக்கு. ஏதாவது ஒண்ணுதான் எடுக்க முடியும். மனசை தேத்திக்கிட்டு, ஏதோ ஒண்ணை செலெக்ட் பண்ணிடுவீங்க. தியேட்டருக்கு போறீங்க.

அஜித், விஜய் படம் ரிலீஸ் ஆகிருக்கு. ஒரு படம்தான் பார்க்க முடியும். உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி ஒண்ணை செலெக்ட் பண்ணி படம் பார்ப்பீங்க. நீங்க வாங்காத சட்டைக்கோ, பார்க்காத படத்துக்கோ இதனால் பெருசாப் பாதிப்பு வந்துடாது. இந்த இடத்துல உங்க விருப்பம் ரெண்டு பொண்ணுங்களா இருந்து, அவங்களுக்கும் உங்களைப் பிடிச்சுருந்தா யாரைத் தேர்ந்தெடுப்பீங்க? குழப்பமா இருக்கும்ல! அந்தக் குழப்பத்தை தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா... கதை கலகலன்னு இருக்கும்ல... அதுதான் படம்," என்கிறார்.

போரு பீரு...

போரு பீரு...

படத்தில் சந்தானத்தின் பஞ்சுக்கும் பஞ்சமில்லையாம். "உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர்அடிக்காம பாத்துக்கும்", ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்', ‘ மாடு முன்னாடி போனா முட்டும்... ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயுமே மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்', படத்துல சிச்சுவேஷனோட பார்க்கும்போது, இன்னும் பல காமெடி அள்ளும்.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

கண்ணா லட்டு திண்ண ஆசையா சேது, விசாகா, நுஷ்ரத், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, விடிவிகணேஷ், நீலிமா, மீரா கிருஷ்ணன், சித்ராலட்சுமணன், கனல் கண்ணன், சந்தான பாரதி, பஞ்சு சுப்பு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே பங்கு பெறுகிறது.

தயாரிப்பும் சந்தானம்தான்

தயாரிப்பும் சந்தானம்தான்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். வாங்ஸ் விஷன் ஒன் இப்படத்தை தயாரிக்கிறது. அதாவது கண்ணா லட்டு திண்ண ஆசையாவுக்குப் பிறகு சந்தானத்தின் சொந்தப் படம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X