கமலுடன் இணைந்து ஒரு காமெடி படம் பண்ணனும்... - சந்தானத்தின் ஆசை
திருச்சி: ரஜினி சாருடன் இரண்டு படங்களில் நடித்துவிட்டேன். அடுத்து கமல் சாருடன் ஒரு படத்தில் முழு நீள காமெடி வேடத்தில் நடிக்க ஆசை என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
தான் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைப் புரமோட் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் சந்தானம்.

அடுத்தும் ஹீரோதான்
நேற்று திருச்சிக்கு வந்திருந்த சந்தானம், அங்கு தியேட்டர் விசிட் முடித்துவிட்டு செய்தியாளர்களுடன் பேசுகையில், "அடுத்த படத்திலும் நான் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளேன். அந்தப் படம் ஜூலையில் தொடங்குகிறது.

ஹீரோயிசம் இல்லாமல்
நான் ஹீரோவாக நடித்தாலும், அதில் ஹீரோயிசம், பஞ்ச் டயலாக் இல்லாமல் பார்த்துக் கொள்வேன். நகைச்சுவைதான் பிரதானமாக இருக்கும்.

அஸ்னாதான் ஜோடி
இந்தப் புதுப் படத்திலும் எனக்கு ஜோடி அஸ்னா ஜவேரிதான். இதை வைத்து எதுவும் கதை கட்டிவிட வேண்டாம். நான் வீட்டிலிருந்து கிளம்பினா வேலை.. வேலை முடிஞ்சா வீடுன்னு இருக்கும் ஆள். எந்த கிசுகிசுவிலும் மாட்ட மாட்டேன்.

கமலுடன்...
ரஜினி சாருடன் இணைந்து இரு படங்களில் நடித்து விட்டேன். அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்து முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











